விஜய்யின் திட்டத்தை அன்றே கணித்தாரா இளையராஜா? கமல் முன் உடைக்கப்பட்ட உண்மை-காணொளி
விஜயிற்கு நடிப்பை தாண்டிய பயணம் ஒன்று இருப்பதாக இளையராஜா பேசிய காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
விஜய்
தமிழ் சினிமாவில் “இளைய தளபதி” என ரசிகர்களால் கொண்டாடப்படுவர் நடிகர் விஜய்.
இவர் நடிப்பில் ஏகப்பட்ட திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும் கடைசியாக இவர் நடிப்பில் “லியோ” திரைப்படம் வெளியானது.
இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இதில் முதல் பாகம் மக்களால் கொண்டாடப்பட்டாலும் இரண்டாம் பாகம் பாரிய விமர்சனங்களை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து, வெங்கட் பிரபு இயக்கத்தில் “கோட்” என்ற திரைப்படம் விறுவிறுப்பாக தயாராகி வருகின்றது.
இளையராஜாவின் கணிப்பு
தொடர்ந்து விஜய், சுமார் 3 வருடங்களுக்கு சினிமாவை விட்டு விலகி, அரசியலுக்கு செல்லப்போவதாக அறிக்கை ஒன்றினை கடந்த தினங்களில் வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், கமலின் முன்னர், இளையராஜா எதிர்கால தலைவர் குறித்து பகிர்ந்த ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அதாவது, “ நாட்டை ஆளுபவர்களுடைய தலையெழுத்தை வைத்து அவர்கள் நாட்டை ஆள்வதில்லை. நாம் யாரால் ஆளப்பட வேண்டும் என்று நம்முடைய தலையில் எழுதியிருக்கணும்..” என பேசியிருந்தார்.
இளையராஜா அன்று மேடையில் கூறியது விஜயிற்கு தற்போது பொருந்துவதால் “விஜய்யின் பயணத்தை இளையராஜா அன்றே கணித்தார்” என ரசிகர்களை கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |