உங்களுக்கு இந்த இடங்களில் அதிக வலி இருக்கிறதா? அப்போ இது நிச்சயம் மாரடைப்புக்கான அறிகுறிகள்
பொதுவாகவே தற்போது பல காரணங்களால் வயது வித்தியாசம் பார்க்காமல் பல நோய்கள்வந்த வண்ணம் தான் உள்ளது. அதிலும் இந்த மாரடைப்பு சாதாரண ஒரு விடயமாக மாறிவிட்டது.
இரவு நன்றாக தூங்கப் போனவர் காலையில் எழுந்து பார்த்தால் மாரடைப்பால் இறந்த செய்தியை அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
நமது இதயம் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு ரத்தத்தை பம்ப் செய்வதால் அவை சீராக செயல்படும் இதயத்திற்கு இரத்தம் மற்றும் ஆக்ஸிஜனை வழங்கும் தமனியில் தடை ஏற்படும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. அந்தவகையில் மாரடைப்பு ஏற்படும் போது உடலில் இந்த இடங்களில் வலி ஏற்படுவது மாரடைப்பிற்கான அறிகுறியாக சொல்லப்படுகிறது.
நெஞ்சு வலி
பொதுவாகவே மாரடைப்பு வருவதற்கு முன்னர் உடல் வழமையை விட அசௌகரியமாக இருக்கும். குறிப்பாக இது மார்புப் பகுதியை சுற்றி அழுத்தமான ஒரு வலி இருந்துக் கொண்டே இருக்கும். மேலும், மாரடைப்பு ஏற்படுவதற்கு நெஞ்சு வலி ஏற்படுவது பொதுவான அறிகுறி தான். கடுமையான அழுத்தம், வலி நீண்ட நேரம் இருந்தால் உடனே மருத்துவரை நாடுதல் நல்லது.
முதுகுவலி
மாரடைப்பு ஏற்படும் போது பொதுவாக மார்பு வலி அதிகமாக இருக்கும் என்பது பொதுவான அறிகுறி என்றாலும் முதுகில் அதிக வலி ஏற்படும் போது அது பெண்களுக்கு இந்த வலி தீவிரமாக இருக்கும். மாரடைப்பு ஏற்படுவதற்கும் முன்னரும் பின்னரும் முகுகில் வலி ஏற்படும். இது ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக இருக்கும்.
வலது கை வலி
மாரடைப்பு ஏற்படுவது இதய தசைக்கு இரத்த ஓட்டம் தடைபடுவதால் மாரடைப்பு வரும். இவ்வாறு ஏற்படுவதற்கு முன்னர் இடது கையில் இலேசான வலி ஏற்பட்டு அதிகரிக்கும் இதுதான் ஆரம்ப அறிகுறியாக பார்ககப்படுகிறது.
தோள்பட்டை வலி
மாரடைப்பு ஏற்படும் போது கழுத்து, தோள்பட்டை, தாடை என்பவற்றில் வலி ஆரம்பிக்கும் போது தோள்பட்டையிலும் அதிக வலி ஏற்பட்டால் சற்றும் தாமதமில்லாமல் மருத்துவரை நாடுதல் நல்லது.
கழுத்துவலி
மார்பை சுற்றி ஒருவித வலி ஆரம்பிக்கும் போது, அந்த வலி கொஞ்சம் கொஞ்சமாக கழுத்தில் பரவும் இது கடினமான கழுத்து வலி, தசை அழுத்தம் என்பவற்றைக் கொடுக்கும் இது வேறு நோய்களின் அறிகுறியாக இருந்தாலும் மாரடைப்பு காரணமாகவும் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |