தினமும் காலையில் ஒரு பல் பூண்டு சாப்பிட்டால் என்ன நடக்கும்?
உங்கள் தினசரி காலை உணவில் ஒரு பச்சை பூண்டுப் பல்லைச் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்தை அதிகரிக்கும் என கூறப்படுகின்றது.
காலையில் ஒரு பல் பூண்டு
உலகில் உள்ள அனைத்து மக்களும் பூண்டு இல்லாமல் சமைப்தே இல்லை. அது எந்த இனத்தவராக இருந்தாலும் சரி. பூண்டில் பல நன்மைகள் நிறைந்துள்ளது.
குறிப்பாக, வைட்டமின் சி, பி6, மாங்கனீஸ், செலினியம் மற்றும் கந்தகம் போன்ற சத்துக்கள் பூண்டில் அதிகம் உள்ளன. இந்த அத்தனை சத்துக்களும் நம் உடலுக்கு மிகவும் முக்கியமாகும்.
இந்த பூண்டை நம் உணவில் சேர்த்துகெ்கொள்வது மிகவும் நல்லது. அந்த வகையில் தினமும் காலையில் ஒரு பல் பூண்டு நாம் சாப்பிட்டு வந்தால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
நோயெதிர்ப்பு சக்தி - தினமும் பச்சையாக பூண்டு சாப்பிட்டால் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைக்கும். ஏனென்றால் பூண்டில் அல்லிசின் என்ற கலவை உள்ளது.
இது பாக்டீரியா, வைரஸ்கள் மற்றும் பூஞ்சைகளை எதிர்த்துப் போராடும். பருவ கால மாற்றங்களில் ஏற்படும் சிறிய உடல் நிலை சோர்வுகளுக்கும் நோய்களுக்கும் இந்த பூண்டை தினமும் காலையில் பச்சையாக சாப்பிட்டால் போதும்.
உடல் நலத்திற்கு நல்லது - நமது உடலுக்கு இதயம் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பாகும். இந்த இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நினைத்தால் தினமும் காலையில் பச்சை பூண்டு சாப்பிடுவது நல்லது.
இது கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கவும், உங்கள் இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கவும் உதவும். இதயத்திற்கு இயற்கை நண்பன் இந்த பூண்டு.
செரிமானம் மேம்படும் - பலருக்கும் இந்த அவசரமான காலத்தில் இருக்கும் பிரச்சனை என்றால் அது செரிமான பிரச்சனை தான். இதற்கு சிறந்த வைத்தியம் பூண்டு தான்.
காலையில் முதலில் இதை உட்கொள்வது பித்த உற்பத்தியைத் தூண்ட உதவுகிறது, இது கொழுப்புகளை உடைத்து ஊட்டச்சத்துக்களை மிகவும் திறம்பட உறிஞ்சுவதற்கு சிறந்தது.
இது உங்கள் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை நச்சுகளை வெளியேற்ற உதவும். இதனால் செரிமானப்பிரச்சனைகளில் இருந்து சிறப்பாக விடுபடலாம்.
இரத்த சர்க்கரை நிலைத்தன்மை - உடலில் ரத்த சக்கரை அளவு ஏற்ற இறக்கமாக இருந்தால் அதற்கு பூண்டு மிகவும் உதவியாக இருக்கும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் காலையில் எழும்பியவுடன் பூண்டை வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும்.
அதன் இயற்கையான சேர்மங்கள் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்தவும் உதவும். குறிப்பாக பூண்டை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளும்போது காலப்போக்கில், வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
பூண்டு சாப்பிடுவதால் நாள்பட்ட கெட்ட கொழுப்பை கரைக்க முடியாது. ஆனால் உடல் எடை அதிகரிக்க கூடாது என நினைப்பவர்கள் இந்த பூண்டை சாப்பிட்டு வந்தால் அது உடல் எடையை கட்டுக்குள் வைக்கும். எனவே பூண்டை தினமும் காலையில் பச்சையாக சாப்பிட பழக்கப்படுத்தி கொள்ளுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
