காதுக்குள் பூச்சி நுழைந்து விட்டதா? இந்த பிழையை செய்யாதீர்கள்… உடனடியாக செய்யவேண்டியது என்னென்ன?
Health
Baby
Oil
Ear
By Nivetha
எமது உடலில் காது மிகவும் மென்மையான ஒரு உறுப்பு.
அதுவும் நுண்ணிய ஓட்டை கொண்ட நுழைவு என்பதால் எந்த பூச்சி போன்றவை நுழைந்தாலும் எடுப்பது மிகவும் சிரமம்.
அவ்வாறு நுழைந்துவிட்டால் தாங்கமுடியாத வலியை ஏற்படுத்தி விடும்.
இப்படி நடந்தால் உடனே நீங்கள் வீட்டில் செய்ய வேண்டிய முதல் உதவி குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

உடனடியாக செய்யவேண்டியது என்னென்ன?
- காதுக்குள் பூச்சி நுழைந்து விட்டால் உடனடியாக காதினுள் எண்ணையையோ (தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய்) உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும்.
- இதனால், காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். பிறகு அதனை எடுத்து விடலாம்.
- சிலர், பூச்சி காதுக்குள் போனதும் வெறும் தண்ணீரை ஊற்றுவார்கள். இந்த தவறை நீங்கள் செய்ய வேண்டாம். பூச்சிக்குத் தேவையான ஆக்ஸிஜன் தண்ணீரிலும் இருப்பதால் சில பூச்சிகள் இறப்பது இல்லை.
- அதே போல, குழந்தைகளுக்கு காது தொடர்பான பிரச்சினைகளைத் தெரிந்து கொள்வது சற்று கடினமான வேலை தான்.
- சில குறிப்புகளை வைத்து குழந்தைகளுக்கு காதில் பிரச்சினை உள்ளதை தெரிந்து கொள்ளலாம்.
- காது கேட்பது மட்டுமே பிரச்சினை அல்ல. காதில் வலி, சீழ் வடிவது, கிருமி தொற்று போன்ற பல பிரச்சினைகள் ஏற்படலாம்.
- ஒருவேளை பூச்சி வெளியே வரவில்லை, இறந்த பூச்சியை எடுக்க முடியவில்லை எனில் மருத்துவரை அணுகுங்கள்.
- குறிப்பாக இதுபோன்ற சமயத்தில் பட்ஸ் காதுக்குள் செலுத்துவது, கம்பி, ஊக்கு போன்ற எந்த பொருளையும் காதுக்குள் விட்டு பயன்படுத்தக் கூடாது.
- இது நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும். கூடுதல் துன்பத்துக்கு ஆளாவீர்கள்.
- குழந்தைகள் தாங்களாகவே பட்ஸ் அல்லது வேறு ஏதேனும் ஒன்றை காதில் போட்டு குடைவதை தவிர்க்க வேண்டும்.

13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US