மாவே அரைக்காமல் இட்லி மாவில் போண்டா செய்யலாம்!
பொதுவாக வீடுகளில் இட்லி செய்து விட்டு அந்த மா மீந்து விட்டால் என்ன செய்வது என்ற குழப்பம் இருக்கும்.
இப்படியொரு நிலை வந்தால் கவலையே வேண்டாம். இதில் சுவையான கார போண்டா செய்யலாம்.
மாலை நேரங்களில் கண்டிப்பாக வீடுகளில் தேநீர் எடுத்து கொள்வோம். அப்போது ஸ்நாக்ஸாக இந்த போண்டாவை எடுத்து கொள்ளலாம்.
அந்த வகையில் சுவையான இட்லி மாவு கார போண்டா எப்படி தயாரிப்பது என்பது தொடர்பில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
இட்லி மாவு – 2 கப்
பூண்டு – இரண்டு பல்
வரமிளகாய் – 3
அரிசி மாவு – ஒரு மேசைக்கரண்டி
ரவை – ஒரு மேசைக்கரண்டி
சமையல் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
கடுகு – கால் தேக்கரண்டி
சீரகம் – கால் தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – ஒன்று
கருவேப்பிலை – ஒரு கொத்து
கார போண்டா எப்படி செய்வது?
இட்லி மாவு இரண்டு கப் அளவு எடுத்து கொள்ள வேண்டும்.(ஓரளவு புளித்த மாவாக இருந்த நல்லது).
பின்னர் வர மிளகாயை எடுத்து சூடு தண்ணீரில் போட்டு அதனை பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
10 நிமிடங்களுக்கு பின்னர் ஊற வைத்துள்ள மிளகாயை எடுத்து அதில் வெள்ளை பூடு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். ( ஊற வைத்த மிளகாய் என்றால் அரைக்கும் போது நைசாக இருக்கும்)
அரைத்த பின்னர் அடுப்பில் தேவையான எண்ணெயுடன் ஒரு வாணலியை வைக்க வேண்டும். எண்ணெய் சூடானதும், கடுகு, வெங்காயம், சீரகம் மற்றும் கறிவேப்பிலை என்பவற்றை பொரிய விட வேண்டும்.
தாளிப்பு, மா, அரைத்து வைத்துள்ள கலவை இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளுதல் வேண்டும். தணணீர் போன்று மா காணப்பட்டால் அதில் அரிசி மாவு, ரவை மா சேர்க்கலாம்.
மா கெட்டியானதும், உருண்டைகளாக பிடித்து எண்ணெய் போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும். பொன்னிறமாகும் வரை எண்ணெய் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சுவையான கார போண்டா தயார்!