அரைத்த இட்லி மாவு புளித்து விட்டதா வீசாதீங்க? இந்த பேஸ்டை சேர்த்து பாருங்க சுவை பிரமாதம்
காலை உணவு செய்யும் போது கண்டிப்பாக எல்லோரது வீட்டிலும் இட்லி தோசை செய்வது வழக்கம். இந்த உணவை செய்வதற்கு ஒரு இரவு முழுவதும் மாவை புளிக்க வைக்க வேண்டும்.
ஆனால் இது அதிகமாக புளித்து விட்டால் இதில் எந்த உணவும் செய்ய முடியாது. இதை வீசத்தான் வேண்டும். அப்படி அதிகமாக புளித்த மாவை வீசாமல் அதில் ஒரு பேஸ்ட் சேர்த்தால் சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும்.
அந்த பேஸ்ட் எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்கலாம்.
இட்லி மா
தேவையான பொருட்கள்: கடலை மாவு -1 ½ தேக்கரண்டி சர்க்கரை – ½ தேக்கரண்டி வெண்ணெய் – 1 தேக்கரண்டி என்ன செய்ய வேண்டும்: ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, வெண்ணெய், சர்க்கரை மூன்றையும் கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்யவும்.
புளித்த மாவுடன் இந்த பேஸ்டை சேர்த்து, நன்கு கலக்கவும். இப்படி செய்தால் மாவில் உள்ள புளிப்பு நீங்கி, புதிது போல ஆகிவிடும். இதன் பின்னர் நீங்கள் வேண்டிய உணவை செய்யலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |