இரண்டு தடுப்பூசி செலுத்திகொண்டாலும் டெல்டா வைரஸ் தாக்குமாம்.. ஆய்வில் வெளியான தகவல்!
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பல நாடுகளும் ஊரடங்கு மற்றும் தடுப்பூசி கட்டாயம் என அறிவுறுத்தி வருகின்றனர். கொரோனா ஒரு பக்கம் இருந்தாலும், அடுத்தடுத்து புது புது வைரஸாக மஞ்சள் பூஞ்சை, டெங்கு, டெல்டா வைரஸ் என பிற வகையான வைரஸ்களும் வேகமாக பரவி வருகிறது.
இந்த நிலையில், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களையும் டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிக்கும் என சென்னையில் ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் கூறியதில், டெல்டா வகை கொரோனா வைரஸ், தடுப்பூசி போட்டவர்கள் மற்றும் தடுப்பூசி போடாத நபர்களையும் பாதிக்கும் திறன் கொண்டது என கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால் இரண்டு தவணை தடுப்பூசி போட்ட நபர்களையும் டெல்டா வகை வைரஸ் பாதிக்கும் எனவும் பாதிப்பின் பொழுது உயிரிழப்பு ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் விஞ்ஞானி ஜெரோமி தங்கராஜ் அவர்கள் கூறுகையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை விட தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களை இந்த டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிக்கும் பொழுது உயிரிழப்பு மிக குறைவாக இருப்பதாக கூறியுள்ளார்.
An ICMR study conducted in Chennai has found that the Delta variant has the potential to infect both vaccinated and unvaccinated individuals, but it reduces mortality among the former group pic.twitter.com/nskpcyNfje
— ANI (@ANI) August 19, 2021