இதையெல்லாம் செய்தால் கல்லுக்குள் கடவுள் வருவார்... கருவறை இருட்டாக இருப்பது ஏன்?
இதையெல்லாம் செய்தால் கல்லுக்குள் கடவுள் வருவார் என்று ஆன்மீக பேச்சாளர் இரா.விஜயகுமார் நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இதையெல்லாம் செய்தால் கல்லுக்குள் கடவுள் வருவாரா?
இது குறித்து இரா.விஜயகுமார் நேர்காணலில் பேசுகையில்,
ஓமம் செய்ய கலசம் வைத்திருப்பார்கள். அந்த கலசத்தில் நூல் சுற்றியிருப்பார்கள். மாவிலை மற்றும் தேங்காய் வைத்திருப்பார்கள். கோவில் கும்பாபிஷேகத்தில் அர்ச்சகர்கள் அந்த கலசத்தை தான் கொண்டு போவார்கள்.
கலசத்தில் ஏன் நூல் சுற்றுகிறார்கள் என்று தெரியுமா?
மனித உடலுக்குள் இருக்கும் பகுதிகளையெல்லாம் அப்படியே காட்டுகிறதுதான் இறைவனுடைய உடம்பாக மாற்றக்கூடிய தத்துவத்தைதான் கலசம் எனப்படுகிறது. ஆகமத்தில் நிறைய விஷயங்கள் சொல்லியிருப்பார்கள். வெறும் குடத்தில் நூல் சுற்றுவார்கள்.
அது குடம் அல்ல நம் உடம்பு. சுற்றக்கூடிய நூல் என்பது நரம்பு. இந்த நரம்பு உள்ளே இணைக்கப்படவேண்டும். கலசத்தில் சுற்றப்படும் நூலில் மீதி நூல் கலசத்திற்குள் உள்ளே விட்டுவிட வேண்டும். நம் உடம்பில் ஓடக்கூடிய ரத்தம் போல், அந்த குடத்திற்குள் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
இந்த ரத்தம் மட்டும் போதாது. உடம்பிற்குள் தாது உப்பு, வைட்டமின்களெல்லாம் வேண்டும். இவை அனைத்தும் வேண்டும். அதனால், ஒரு கலசத்தில் வெட்டிவேர், ஜாதிக்காய், ஏலக்காய், கற்பூரம், லவங்கம் இத்தனையும் உடம்பில் ஓடக்கூடிய செல்களாக, அணுக்களாக உள்ளே போடுவார்கள்.
வெட்டி வைத்த தேங்காய் அனது தலை. நடுவில் தர்மபுல் வைப்பார்கள். அந்த இரண்டு தர்மபுல் ஒன்று உடம்போடு இணைப்பதற்காக, மற்றொன்று பிரம்பஞ்சத்தை இணைப்பதற்காக வைப்பார்கள். நம் உடம்பு எப்படியோ அதை காட்டுவதுதான் இந்த கலசம்.
கலசத்திற்குள் எப்படி கடவுள் வருகிறார்?
அந்த சாதாரண தண்ணீரை சுத்தப்படுத்துவதற்காக ஏகப்பட்ட மூலிகைகளை அதில் கொட்டி அதை சுத்தப்படுத்திவிட்டோம். அதற்குள் சாமி எழுந்தருள வேண்டும். அதற்கு சாமியார் பூ போடுவார்.. எழுந்து அருள்க என்று. இந்த குடத்தில் தண்ணீர் ஊற்றிவிட்டேன். இந்த தண்ணீர் சாதாரண தண்ணீராக இருக்கக்கூடாது.
இறைவன் எழுந்தருள வேண்டிய இடம். அது எப்படி இருக்க வேண்டும் என்றால், நம் நாட்டில் ஓடக்கூடிய புண்ணிய நதிகள் அல்லது ஜீவ நதி இவை அனைத்தும் இதில் சங்கமம் ஆகட்டும் என்று கூறி, அதன் பிறகு, அர்ச்சனை செய்யும் அர்ச்சகர், என் உள்ளுக்குள் பிரண சக்தி இருக்கு.
அது வேறு யாரும் இல்லை நீதான் கடவுளே, என் பிராண சக்தியை எடுத்து இந்த கலசத்தில் கொடுக்கிறேன். என் உடம்பில் எந்த உயிர் ஓடிக்கொண்டு இருக்கிறதோ அந்த உயிருக்கு எது காரணமோ, அந்த காரணத்திற்கு வடிவாக இருக்கக்கூடிய இறைவன். அந்த கலசத்தில் எழுந்து அருளட்டும் என்று அப்படி சொல்லி அர்ச்சகர் பூ தூவுகிறார்.
சாமி அந்த கலசத்தில் நிச்சயம் வருவாரா?
கலசத்தில் சாமி நிச்சயம் வருவார். ஏனென்றால், அர்ச்சகர் சொல்லக்கூடிய வார்த்தைகள் அனைத்துமே ஒலி சம்பந்தப்பட்டது. சப்தம், நாதம் என்கிற அதற்கு பிறகு வரி வடிவம், இன்னும் ஏகப்பட்ட விஞ்ஞான அடிப்படையில் உருவாக்கப்பட்ட சில வார்த்தைகளால் அவர் சொல்கிறார். அந்த வார்த்தைகள் மட்டும் பத்தாது. மனசையும் பக்குவம் படுத்த வேண்டும். ஏனென்றால், நீங்கள் கிராமத்திற்குள் சென்றால் சின்ன, சின்ன கற்களை வைத்து சாமி என்று கும்பிடுவார்கள்.
கல்லுக்குள் சாமி இருப்பாரா?
நிச்சயம் கல்லுக்குள் சாமி வருவார். அது எப்படி என்றால், மனசு எந்த அளவிற்கு கடவுளை நோக்கி ஓடுகிறதோ, பக்தனை நோக்கி கடவுள் ஓடி வருவார். அதனால்தான் அந்த கலசத்தில் பூஜை செய்து, கலசத்தில் இருக்கக்கூடிய இறைவனை நாம் கும்பாபிஷேகத்தின்போது சில விஞ்ஞான மந்திரங்கள், தொழில்நுட்ப மூலமாக இந்த சக்தி கடத்தல் நிகழ்வை நடத்துகிறோம்.
ஒரு சின்ன சாதாரண கலசத்திற்குள் இத்தனை விஷயத்தை வைத்திருக்கிறார்கள். இனிமேல், நீங்கள் எங்கையாவது சென்றாலோ, உங்களிடம் குழந்தை இதை குறித்து கேட்டாலோ என் தாத்தா முன்னாடி செய்தார், அதனால் நான் இப்படி செய்தேன் என்று சொல்லாதீர்கள். ஏனென்றால் இப்போ பிறக்கு குழந்தைகளுக்கு நம்மை விட அறிவு அதிகம். அதனால், நீங்கள் படித்து இதையெல்லாம் உங்கள் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும்.