சுவையான ஹைதராபாத் ஸ்டைல் தக்காளி சட்னி எப்படி செய்யனும் தெரியுமா?
சுவையான ஹைதராபாத் ஸ்டைல் தக்களாி சட்னி எப்படி செய்வது என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.
தக்களாி சட்னி
இந்திய மாநிலம் தமிழ்நாட்டில் இட்லி, தோசைக்கு சட்னி முக்கியமான காலை உணவாகும். அதிலும் இதற்கு துணையாக தேங்காய், தக்காளி சட்னிகளை சேர்த்து சாப்பிடுவது இன்னும் அட்டகாசமான சுவையை கொடுக்கின்றது.
அந்த வகையில் ஹைதராபாத் ஸ்டைல் தக்களாி சட்னி எவ்வாறு செய்வது என்று இந்த பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள்:
2 கப் நறுக்கிய தக்காளி
1 பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது)
3 பச்சை மிளகாய்
5 பல் பூண்டு
அரை இன்ச் இஞ்சி
2 ஸ்பூன் மிளகாய் தூள் -
அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
1 ஸ்பூன் சீரகம்
1 கொத்து கறிவேப்பிலை
1 ஸ்பூன் கடுகு
அரை ஸ்பூன் புளிக்கரைசல்
2 ஸ்பூன் வெல்லம்
2 ஸ்பூன் எண்ணெய்
தேவையான அளவு உப்பு

செய்முறை:
முதலில் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானதும், அதில் சீரகம், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
அது நன்கு வதக்கியவுடன் இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின் அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இது நன்கு வதக்கிய பின் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும். தக்காளி பாதி வெந்த பின் அதில் மசாலா பொருள்களான மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

இவை எல்லாம் நன்கு வதக்கிய பின் நாம் கரைத்து வைத்த புளியை சேர்த்து கலந்து விட வேண்டும். இவை எல்லாம் கெட்டியான பதத்திற்கு வரும் வரை வதக்கவும்.
அந்த நிலைக்கு வந்த பின் சிறிது கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான ஹைதராபாத் ஸ்டைல் தக்காளி சட்னி ரெடி.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |