இரும்பு கடாயில் சமைக்கக் கூடாத உணவுகள்! சமைத்தால் ஆபத்தா?
நீங்கள் இரும்பு கடாயில் சமைக்க விரும்பினால் சில விஷயங்களை பின்பற்ற வேண்டியது அவசியம். இரும்பு பாத்திரங்களில் உணவை நீண்ட நேரம் வைக்கக் கூடாது அவை உணவின் சுவையை மாற்றக் கூடும்.
இரும்பு பாத்திரங்களில் எந்த மாதிரியான உணவுகளை சமைக்கக் கூடாது
மீன்
இரும்பு கடாய் போன்றவற்றில் மீன் போன்ற உணவுகளை சமைக்கக் கூடாது. ஏனெனில் மீன் போன்ற உணவுகள் இரும்பு கடாயில் ஒட்டிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. இதில் காணப்படும் செதில்கள் மற்றும் சீக்கிரமே வெந்து விடும் தன்மையால் மீன் சமைக்க இரும்பு கடாய் ஏற்றது அல்ல.
அரிசி சாதம், பாஸ்தா மற்றும் முட்டை
அரிசி சாதம், பாஸ்தா மற்றும் முட்டை போன்ற உணவுகள் இயற்கையாகவே பாத்திரங்களில் ஒட்டிக் கொள்ளும் தன்மை வாய்ந்தவை. இந்த உணவுகளை லேசாக வதக்குவதற்கு இரும்பு பாத்திரங்களை பயன்படுத்தினால் கூட ஒட்டிக் கொண்ட பிறகு எடுப்பதற்கு கஷ்டமாக இருக்கும்.
இனிப்பு வகைகள்
இனிப்பு உணவுகளை சமைக்க இருப்பு பாத்திரங்கள் ஏற்றது கிடையாது. நீங்கள் அதையும் மீறி ஆசைக்கு சமைத்தால் இனிப்பு உணவின் வாசனை அப்படியே பாத்திரத்தில் நீடிக்க வாய்ப்பு உள்ளது. அதே மாதிரி சமைத்த உணவில் உலோக வாசனை வர வாய்ப்பு உள்ளது. எனவே இனிப்பு வகைகளை இரும்பு பாத்திரங்களில் சமைக்க வேண்டாம்.