கணவன்- மனைவி வாழ்க்கையில் விளையாடும் வாஸ்து தவறுகள்.. இனி தவறியும் செய்யாதீங்க
இந்து மதத்திலுள்ளவர்கள் வாஸ்துக்களை கடைபிடிப்பது அதிகம். ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருப்பதற்கு கட்டப்படும் வீடு முதல் அங்கு வைக்கப்படும் பொருட்கள் வரை வாஸ்து குறிப்புக்கள் பார்க்கப்படுகிறது.
அதே போன்று வீட்டிலுள்ளவர்களும் சில வாஸ்துக்களை பின்பற்ற வேண்டும் என்றும் சாஸ்த்திரங்களில் கூறப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக புதிதாக திருமணமான தம்பதிகள் அவர்களின் உறவை மேலும் வலுப்படுத்திக் கொள்வதற்கு சில ஆன்மீக விடயங்களில் கவனம் கொள்வது அவசியம்.
அந்த வகையில், கணவன்- மனைவி இருவரும் திருமண வாழ்க்கையில் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றால் குறிப்பிட்ட வாஸ்து தவறுகளை செய்யக்கூடாது. அப்படி செய்யக் கூடாத வாஸ்து தவறுகள் என்னென்ன என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

கணவன்- மனைவியை பிரித்து வைக்கும் வாஸ்து தவறுகள்
1. கணவன்- மனைவி இருவருக்கும் இடையில் தொடர்ந்து பிரச்சினைகள் வந்து கொண்டு இருந்தால் அவர்களின் வீட்டில் வாஸ்து தவறுகள் அதிகமாக இருக்கலாம். இதனை கவனித்து ஆரம்பித்தில் சரிச் செய்யாவிட்டால் பிரச்சினைகள் முற்றிப்போக வாய்ப்பு உள்ளது.
2. வடகிழக்கு திசையில் தலையணை வைத்து தூங்கும் தம்பதிகளுக்குள் பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது. இந்த திசையில் தூங்கும் பொழுது மன அழுத்தம், உடல் நல குறைபாடுகள் ஏற்படுவதற்கு அதிகமான வாய்ப்பு உள்ளது.

3. தம்பதிகள் புதிதாக திருமணமான பின்னர் வடக்கு திசையில் படுக்கையை போட்டு படுப்பார்கள். இதனால் விவாகரத்து கூட ஏற்படலாம் என வாஸ்து நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். படுக்கையறையில் படுக்கையை சரியான திசையில் வைக்க வேண்டும்.
4. வாஸ்து சாஸ்திரங்களில் கூறப்பட்டது போன்று அறையின் தெற்கு திசை ஒருபோதும் இருட்டாக இருக்கக் கூடாது. தம்பதிகள் குடும்பமாக வாழும் அறையில் தெற்கு திசையில் இருட்டாக இருந்தால் உங்களுடைய உறவில் பிரச்சினைகள் வரலாம்.

5. படுக்கை அறையில் முட்கள் கொண்ட செடிகள், உடைந்த பொருட்கள், பிரிட்ஜ் போன்றவற்றை வைக்கக்கூடாது. இது உங்களுடைய உறவில் தாக்கம் செலுத்தும். சிலருக்கு இதனால் விவாகரத்து கூட நடக்கலாம். அடிக்கடி சண்டை வருகிறது என்றால் முதலில் வீட்டின் வாஸ்தை பரிசோதித்து பாருங்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |