மகள்களிடம் கைவரிசையைக் காட்டிய கணவர்... சத்தமின்றி மனைவி கொடுத்த தண்டனை
இந்தியாவில் கணவரை கொலை செய்துவிட்டு சடலத்தை ஒரு மாதம் வீட்டுக்குள் புதைத்து வைத்திருந்த மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். ஹைதராபாத்தின் வனஸ்தாலிபுரம் பகுதியை சேர்ந்தவர் கங்காதீப் (38). இவர் மனைவி மரியதா (32). மரியதாவுக்கு முதல் திருமணம் மூலம் 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
கணவரை விவாகரத்து செய்த பின்னர் மரியதா கடந்தாண்டு கங்காதீப்புடன் காதலில் விழுந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் அவரைத் திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 8ம் தேதி கங்காதீப் காணாமல் போனதால், அவரது சகோதரர் பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். பொலிசார் மனைவி மரியதாவிடம் விசாரணை நடத்தியதில், ஆரம்பத்தில் சமாளித்து பதில் கூறிய அவர் இறுதியில் தான் அவரை கொலை செய்துவிட்டதாக ஒப்பக்கொண்டுள்ளார்.
அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் தனது இரண்டாவது கணவர், தனது இரண்டு மகள்களிடம் தவறாக நடந்துகொண்டதால் இதனால் இவ்வாறு செய்தேன் என்று கூறியுள்ளார். சம்பவத்தன்று அவரது நண்பருடன் மது அருந்திய நிலையில், நண்பர் வீட்டிற்குச் சென்ற நிலையில் கங்காதீப் தன்னிடம் சண்டையிட்டதால், ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ததோடு, பிணத்தினை வீட்டிலேயே புதைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் அழுகிய நிலையில் கங்காதீப்பின் சடலத்தினை மீட்ட பொலிசார், அவரது மனைவி மரியதாவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.