மனைவியுடன் செல்ஃபி எடுக்க பரிதவித்த கணவர் - இணையத்தில் வைரலாகும் வீடியோ
தனது மனைவியுடன் செல்ஃபி எடுக்க கணவர் போராடிய வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்றைய நவீன காலக்கட்டத்தில் செல்போன் என்பது சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை வைத்திருக்கிறார்கள்.
அதிலும், இந்த செல்ஃபி புகைப்படம் எடுக்க ஆரம்பித்துவிட்டால் போது இடம் , பொருள் தெரியாத அளவிற்கு அதிலேயே மூழ்கி போய்விடுவார்கள்.

எங்கயாவது ஒரு அழகிய இடத்திற்கு சென்றுவிட்டால் அந்த இடத்தை ரசிக்காமல் செல்ஃபி எடுத்து ஸ்டேட்டஸ் வைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.
இளைஞர்கள் தான் அடிமை என்றால் வயதானவர்களும் இதற்கு அடிமையாகிவிட்டார்கள்.

அந்த வகையில் மெட்ரோ ரயில் ஒன்றில் தனது மனைவியுடன் செல்பி எடுக்க போராடும் கணவரின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இவர்கள் யாராவது தங்களை பார்க்கிறார்களா? என நோட்டம்விட்டுக்கொண்டே, தனது மனைவியுடன் செல்பி எடுக்க முயற்சித்து இறுதியில் அதில் வெற்றியும் அடைகிறார்.