இரவில் அரங்கேறிய துயரம! உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மனைவி: கணவர் செய்தது என்ன?
மது அருந்த பணம் கொடுக்காத மனைவியை கணவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மது அருந்த பணம் கொடுக்காத மனைவி
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (45). இவரது மனைவி செல்வி (35). இவர்கள் வெல்லம் தயாரிக்கும் ஆலையில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில், மாதேஸ் மது வாங்குவதற்கு செல்வியிடம் பணம் கேட்டுள்ளார்.
ஆனால் செல்வி கொடுக்க முறுத்ததால் இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டு, இறுதியில் கொலை வரை சென்றுள்ளது. ஆம் ஆத்திரத்தில் மாதேஸ் செல்வியை சரமாரியாக வெட்டியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய செல்வியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
செல்வியின் கணவர் மாதேஸ் பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.