காதல் மனைவி தலையில் கல்லை போட்டு கொலை! கணவரின் வெறிச்செயலுக்கு காரணம் என்ன?
குடும்ப தகராறில் கணவர் ஒருவர் காதல் மனைவியின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணம் செய்த ஜோடி
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பாப்பம்பட்டி எஸ்.கே.சி நகரைச் சேர்ந்தவர் துரை என்கிற திருமூர்த்தி. இவரது மனைவி மாலதி. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கட்டிட வேலை செய்யும் திருமூர்த்தி அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் அடிக்கடி பிரச்சினையும் ஏற்பட்ட நிலையில், நேற்று மதியம் பிரச்சினை அதிகமாகி மனைவி மாலதியின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்துவிட்டு திருமூர்த்தி குழந்தைகளை அழைத்துக்கொண்டு எஸ்கேப் ஆகியுள்ளார்.
உடனே தகவலறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாலதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில், குழந்தைகளுடன் தப்பியோடிய திருமூர்த்தியையும் பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.