கறி வெட்டும் கத்தியால் கணவனை வெட்டிக் கொன்ற மனைவி: நாள்தோறும் அனுபவித்த சித்ரவதை
மதுபோதையில் அடிக்கடி தகராறு செய்த கணவனை மனைவி வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் நவ்ஷாத். இவரது மனைவி நஷிரியா. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், ஆட்டோ ஓட்டும் தொழிலை செய்து வந்துள்ளார் நவ்ஷாத்.
குடிபோதைக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு தகராறு செய்துவந்த நவ்ஷாத் சம்பவத்தன்றும் மனைவியுடன் சண்டை போட்ட நிலையில், கறி வெட்டும் கத்தியை எடுத்து நஷிரியாவை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
ஆத்திரம் அடைந்த நஷிரியா அவரிடமிருந்து கத்தியை பிடுங்கி நவ்ஷாத்தை சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளார். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து துடிதுடித்த நவ்ஷாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து, வீட்டிலிருந்து சிவகாஞ்சி காவல் நிலையத்திற்கு நடந்தே சென்ற நஷிரியா தான் தனது கணவனை கொன்றுவிட்டதாக கூறி சரணடந்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் நவ்ஷாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, நஷிரியாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.