மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் நிகழ்த்திய நாடகம்! வசமாக சிக்கியது எப்படி?
மனைவி மின்சாரம் பாய்ந்து இறந்துவிட்டதாக கூறி கணவர் அவசர அவசரமாக இறுதிச்சடங்குக்கு ஏற்பாடு செய்த நிலையில், இறுதியில் கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.
மனைவியை கொலை செய்த கணவர்
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே வசித்து வருபவர் ரஞ்சித்குமார். இவரது மனைவி சுதாமதி(25) இந்த தம்பதிகளுக்கு 3 மற்றும் 2 வயதில் இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில் மனைவி நேற்று முன்தினம் துணிகளை அயன் செய்யும் போது மின்சாரம் தாக்கிய உயிரிழந்ததாக கூறிய கணவர், பொலிசாருக்கு தகவல் அளிக்காமல் அவசரமாக இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்துள்ளார்.
சுதாமதியின் அண்ணனுக்கு தங்கை இறப்பில் மர்மம் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்ட நிலையில், பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அறிக்கையில் காத்திருந்த அதிர்ச்சி
பிரேத பரிசோதனை அறிக்கையில் சுதாமதி தலையில் பலத்த காயம் மற்றும் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது.
பின்பு பொலிசாரின் கிடுக்குப்புடி விசாரணையில் ரஞ்சித் குமார் மனைவியை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார்.
அதாவது ரஞ்சித் குமார் வேலை முடித்து வீட்டிற்கு வருகையில், சுதாமதி போன் பேசியதால், சந்தேகம் அடைந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்பு தகராறில் மனைவியின் தலையில் கட்டையால் தாக்கிதோடு, மயங்கி விழுந்த அவரின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.