பூட்டிய வீட்டிற்குள் அலங்கோலமாய் கிடந்த தம்பதிகள்... அக்கம்பக்கத்தினர் அவதானித்த பேரதிர்ச்சி
தமிழகத்தில் நகைக்காக தம்பதிகள் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள அல்லிநகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி அறிவழகி.
இவர்களுக்கு முருகானந்தம் என்ற மகனும், சத்யா என்ற மகளும் உள்ளனர். சத்யா திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். முருகானந்தம் சென்னையில் உள்ள கார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் பெரியசாமியும், அறிவழகியும் தனியாக வசித்து வந்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு, இவர்களின் வீட்டு கதவு வெகுநேரமாக திறக்கப்படாமல் இருந்துள்ளது.
பின்பு அக்கம் பக்கத்தினர் சென்று அவதானித்த போது, இருவரும் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
உயிரிழந்த அறிவழகியின் கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் தாலி செயின் உள்பட நகைகள் அனைத்தும் திருடப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
நகைக்காக இருவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளதோடு, மோப்ப நாய்கள் மூலம் கொள்ளையர்களை பொலிசார் தீவிரமாகவும் தேடி வருகின்றனர்.