மனித உருவ ரோபோ சாலையை கடக்கும் வைரல் காணொளி
துபாயில் ஒரு மனித வடிவ ரோபோ சாலையைக் கடக்கும் காட்சியைக் காட்டும் வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வைரல் காணொளி
இந்த வீடியோவில், எமிரேட்ஸ் டவர் அருகே உள்ள சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு காருக்கு முன்னால், ஒரு ரோபோ மிதமான வேகத்தில் ஓடி சாலையைக் கடக்கிறது.
ரோபோவின் நடையும் உடற்கட்டுமானமும் மனிதனைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, அந்த காட்சி உண்மையா அல்லது தொழில்நுட்ப காட்சியாக உருவாக்கப்பட்டதா என்பது குறித்து பலரும் விவாதித்து வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் ஏதும் வெளிவரவில்லை என்றாலும், இது டுபாயின் தொழில்நுட்ப முன்னேற்றத்தைக் குறிக்கும் ஒரு வித்தியாசமான முயற்சியாகவும், அல்லது போஸ்ட்-எடிட்டிங் மூலம் உருவாக்கப்பட்ட கிராபிக் காட்சி எனவும் நெட்டிசன்கள் தங்களது கருதியை பகிர்ந்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |