100 ஆண்டு பழமையான கல்லறைக்குள் இருந்து எட்டிப்பார்த்த மர்ம பொருள் - பீதியை கிளப்பிய வீடியோ!
100 வருடம் பழமையான கல்லறை ஒன்றிலிருந்து வித்தியாசமான ஒரு பொருள் இருந்த வீடியோ பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
கலிபோர்னியாவின் தலைநகரான Sacramento என்ற இடத்தில் ஜோயல் மோரிசன்(Joel Morrison) 37 வயதுடைய நபர் 100 ஆண்டுகள் பழமையான கல்லறைக்கு சென்றுள்ளார்.
அப்போது, 1906ஆம் ஆண்டில் கட்டப்பட்ட கல்லறையிலிருந்து, ஒரு பெண்ணின் தலைமுடி எட்டிப்பார்ப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இது எப்படி சாத்தியம் என மனித தலைமுடிதானா? என கண்டறிய அதிலிருந்து சிறிது மாதிரி சேகரித்து, அந்த முடியை நீதிமன்ற அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்திருக்கிறார்.
மேலும், கல்லறையின் அருகில் இருக்கும் மரத்தின் வேர்கள் நீண்டு வளர்ந்ததால், கல்லறையை பாதித்து இருக்கலாம்.,
அல்லது அல்லது விலங்குகள் ஏதேனும் தலைமுடியை இழுத்திருக்கலாம் என ஜோயல் கருதியுள்ளார். குறிப்பிட்ட இந்த வீடியோவும் பரவலாக பேசப்பட்டு பரவி வருகிறது.
Horrifying moment ‘human hair’ pokes out of a 100-year-old grave pic.twitter.com/X6Soz7WGlZ
— The Sun (@TheSun) August 28, 2022