வீட்டிற்குள் பாம்பு வருவது போன்று கனவு வந்தால் என்ன பலன்? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
வீட்டிற்குள் பாம்பு வருவது போன்று கனவு கண்டால் என்ன பலன்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கனவு என்பது அனைவருக்குமே வருவது இயல்பானது தான். அதிலும் விடியற்காலம் காணும் கனவுகள் பழித்துவிடும் என்று முன்னோர்கள் கூறுவதுண்டு.
ஆனால் சில கனவுகள் பயங்கரமானதாக இருக்கும் என்பதால், காலையில் எழும்பும் போது பயத்துடனே காணப்படுவார்கள்.
அதிலும் பாம்பு என்றால் எப்பொழுதும் பயத்துடனே அனைவரும் காணப்படுவார்கள். தற்போது கனவில் பாம்பு வந்தால் என்ன பலன்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.
பாம்பு கனவில் வந்தால்
பாம்பு வீட்டுக்குள் வந்துவிட்டு வெளியில் போவது போல் கனவு வந்தால் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டும்.
நம் தலைக்குமேல் குடை பிடிப்பது போன்றோ, பாம்பு நம் மீது ஏறிச்செல்வது போன்றோ கனவு வந்தால், அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கப்போகின்றது என்று அர்த்தம்.
பாம்பு உங்களுடைய வீட்டில் வெளியேறுவது போல் கனவு கண்டால் இதுவரைக்கும் ஏற்பட்டிருந்த கஷ்டஙகள் நீங்கி மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
வீட்டிற்குள் நுழைந்த பாம்பை அடித்து கொள்வது போன்று கனவு கண்டால் உங்கள் சுற்றி உள்ளவர்களை பற்றி தெரிந்து கொள்வீர்களாம்.
வீட்டிற்குள் நுழைந்த பாம்பு யாரையாவது கடிப்பது போன்று கனவு கண்டால் நீங்கள் அதிகம் நம்பும் நபர் உங்களை ஏமாற்றிவிடுவார்கள்.
நல்ல பாம்பு வீட்டிற்குள் வருவது போல் கனவு கண்டால் குடும்பத்தில் நன்மைகள் நடக்கும்.
நல்ல பாம்பு வீட்டில் சுற்றுவது போன்று கனவு கண்டால் நோய்கள் ஏற்படும்.
நல்ல பாம்பு வீட்டில் மறைந்து இருப்பது போல் கனவு கண்டால் வீட்டில் உள்ளவர்களால் பிரச்சினை ஏற்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |