பொது இடங்களில் இனி அதை செய்ய தடையில்லையாம்! பிரபல நாட்டின் அறிவிப்பால் கொண்டாட்டத்தில் இளைஞர்கள்
பொது இடங்களில் இனி ஒருவரை சந்திக்கும் போது முத்தமிட்டு கட்டியணைப்பதில் தடையில்லை என பிரான்ஸ் நாடு அறிவித்துள்ள தகவல் இளைஞர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனா வைரஸ் ஆனது உலகமெங்கும் ஆட்டிப்படைத்தால், பொதுமக்களுக்கு வெளிப்படையான கலாச்சாரத்தை கடைப்பிடிக்க பல நாடுகளில் அரசு தடைவிதித்திருந்தது. அதிலும், முக்கியமாக கட்டியணைப்பது, முத்தமிடுவது போன்ற செயல்களை செய்வதால் கொரோனா பரவும் என்பதால் தடையை விதித்தனர்.
இந்த நிலையில், தற்போது பிரான்ஸ் நாட்டில் தற்போது கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்து விட்டது. மேலும் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர். எனவே பிரான்ஸ் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது.
அதில் முக்கியமாக, ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து கொள்வதற்கு இருந்த தடையும் நீக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் இளைஞர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.