மான் கூட்டத்திற்குள் திடீரென புகுந்த புலி: நடந்தது என்ன?
கர்நாடக மாநிலத்தில் நாகரஹோலே புலிகள் காப்பகத்தில் மான் கூட்டங்களுக்கு மத்தியில் சென்ற புலியின் காட்சியால் பார்வையாளர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
காட்டு விலங்குகளில் வேட்டை என்பது மிகவும் பயங்கரமாகவே இருக்கும். அதிலும் காட்டு ராஜாவான சிங்கத்திற்கு அடுத்து மற்ற விலங்குகளை மின்னல் வேகத்தில் வேட்டையாடும் விலங்கு என்றால் அது புலி தான்.
பெரும்பாலான நேரங்களில் நாம் புலி மானை வேட்டையாடுவதைத் தான் அவதானித்திருப்போம். ஆனால் இங்கு மிகவும் வித்தியாசமான நிகழ்வு நடைபெற்றுள்ளது.
கர்நாடகாவில் புலிகள் காப்பகத்தில் 100க்கும் மேற்பட்ட மான்கள் புற்களை மேய்ந்து கொண்டிருக்கையில், இடையே புலி ஒன்று மிகவும் கூலாக நடந்து சென்றுள்ளது.
புலி வருவதை அவதானித்த மான்களில் சில நடுநடுங்கினாலும், புலி தனது வேலையை பார்த்துவிட்டு செல்வதைக் கண்டு மான்களும் இயல்பு நிலைக்கு வந்துள்ளது.
சுமார் 21 விநாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.