இந்த ராசியினரின் மரணம் பெரும்பாலும் இப்படி தான் நிகழுமாம்: உங்க ராசி என்ன?
பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவரும் நிச்சயம் ஒரு நாள் இறப்பை சந்தித்தே ஆக வேண்டும் என்பது இயற்கையின் நியதி. மனிதன் பிறந்த நாள் தொடக்கம் இவனின் இறப்பு வரையிலான ஒரு பயணமே இந்த வாழ்க்கை ஆகும்.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் ஆளுமைக்கும் இடையில் தொடர்பு காணப்படுவதை போல் ஒருவரின் ராசியானது அவர்கள் இறக்கும் முறையிலும் நிச்சயம் தாக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்த வகையில் 12 ராசியில் பிறந்தவர்களும் பெரும்பாலும் எந்த முறையில் இறப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
உங்க ராசி என்ன?
மேஷம் : மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு விபத்து மூலம் துர்மரணம் ஏற்பவதற்கு அதிக வாய்ப்பகள் காணப்படுகின்றது. இவர்கள் மிகவும் தைரியமானவர்களாகவும் மன வலிமை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். மலை ஏறுதல், வேகமாக வாகனம் ஓட்டுதல், நெருப்புடன் விளையாடுதல் போன்ற சாகசங்களில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பதால் விபத்துக்கள் ஏற்படும் சந்தர்ப்பங்கள் அதிகம்.
ரிஷபம்:ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மிகவும் அன்பானவர்களாக இருக்கின்ற போதிலும் தங்கள் நலனில் மட்டுமே அதிக அக்கறை செலுத்துவார்கள். இவர்களின் சுயநல நடத்தையை விரும்பாத ஒருவரால் அவர்கள் கொல்லப்படும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது. பெரும்பாலும் இவர்களின் இறப்பு கொலை மூலமாக நிகழலாம்.
மிதுனம்: மிதுன ராசியில் பிறந்தவர்கள் இரட்டை ஆளுமைக் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் சில செயற்பாடுகள் மற்றவர்களை மனதளவில் எளிதில் காயப்படுத்திவிடும். இதனால் இவர்களுக்கு பகைவர்கள் அதிகம்.இவர்கள் உயிருடன் புதைக்கப்படுவதன் மூலம் மரணம் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றது.
கடகம்: கடக ராசியினர் பெரும்பாலும் தவறான நட்பு காரணமான மரணத்தை தழுவ அதிக வாய்ப்பு காணப்படுகின்றது. இவர்கள் நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
சிம்மம்: சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சிறிய விடயத்தையும் ஆழமாக சிந்திக்கக்கூடியவர்கள். அதனால் மனச்சோர்வு, விரக்தி, தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடும் இதனால் பெரும்பாலும் தற்கொலையால் மரணம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.
கன்னி: கன்னி ராசியினர் அதிகம் சுயநலம் கொண்டவர்களாக இருப்பார்கள்.இவர்பகள் தங்களைப் பற்றி மட்டுமே அதிகம் சிந்திப்பார்கள்.சில சமயங்களில் தங்கள் சொந்த மனதில் ஏற்படும் தீவிர குழப்பம் காரணமாக இவர்களுக்கு தற்கொலை எண்ணம் அதிகரிக்க வாய்ப்பு காணப்புடுகின்றது. இவர்களின் மரணம் தற்கொலை மூலமாக இருக்கலாம்.
துலாம்: துலாம் ராசியில் பிறந்தவர்கள் இயல்பானவே இராஜதந்திர குணத்தைக் கொண்டிருப்பார்கள். இவர்கள் பெருமி்பாலும் சிக்கலான அல்லது ஆபத்தான விஷயங்களைச் செய்ய முயற்சிப்பார்கள். இதனால் சட்டவிரோத செயல்களைச் செய்வது அவர்களுக்கு எதிராக மாற வாய்ப்பு இருக்கின்றது. இவர்கள் சட்டப்படி தூக்கிலடப்பட வாய்ப்பு காணப்படுகின்றது.
விருச்சிகம்: விருச்சிக ராசியினர் மர்மமான ஆளுமைக் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களால் ஒருபோதும் அன்புக்குரியவர்களை இழக்க இயலாதவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு நெருக்கமான ஒருவரின் பிரிவு அல்லது மரணம் இவர்களின் மரணத்துக்கு காரணமாக இருக்கும்.
தனுசு: தனுசு ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் தொழில்நுட்பம் மற்றும் ஆன்லைன் கேம்களில் அதிக ஆர்வம் கொண்டிருப்பதால், இணையத்தில் அதிக நேரம் செலவிடுவது மரணத்தை ஏற்பத்த கூடும்.
மகரம்: மகர ராசியினர் அதிகம் சோம்பேறித்தனம் கொண்டவர்களாக இருப்பார்கள்.இவர்கள் உறங்குவதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள் அதிக தூக்கமே அவர்களின் மரணத்திற்கு காரணமாக இருக்கும்.
கும்பம்: கும்ப ராசியில் பிறந்தவர்கள் லாபத்திற்காக எதையும் செய்ய கூடியவர்களாக இருப்பார்கள். அது நடக்காத பட்சத்தில் அவர்கள் பெரிதும் விரக்தி அடைவார்கள். அவர்களின் நிதி இழப்பு காரணமாக மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
மீனம்: மீன ராசியினர் எப்போதும் நீதிக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இருப்பினும், சில சமயங்களில் எந்த காரணமும் இல்லாமல் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்வார்கள். அவர்களுக்கு கவனக்குறைவு அதிகமாக இருக்கும். இவர்கள் மின்சாரம் தாக்கி இறப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |