இப்படி வாக்கிங் போவதால் எடை குறையுமா? வயதானவர்கள் மட்டும் தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக ஆரோக்கியமான மனநிலை மற்றும் மகிழ்ச்சியான சூழல் இவை இரண்டையும் வைத்து உடல் எடையை கணிசமாக குறைக்கலாம் என்றால் நம்ப முடிகிறதா?
ஆம், உடல் ஆரோக்கியம் விடயத்தில் மன ஆரோக்கியம் மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றது. தினமும் வாக்கிங் போவதன் பல நன்மைகள் இருக்கின்றன. அதில் ஒன்று தான் எடை குறைப்பு.
நீண்டகால தொடர்ச்சியான வாக்கிங் இருந்தால் சிறு நோய்கள், பருவகால ஒவ்வாமைகள் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதுடன் நீண்ட நாட்கள் வாழலாம் என்றும் சொல்லப்படுகின்றது.
இது போல் வாக்கிங் போவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
வாக்கிங் போவதால் ஏற்படும் நன்மைகள்
1. தினசரி நடைப்பயணத்தை சுமார் ஒரு மணிநேரம் ஈடுபடுபவர்கள் மரபணுக்களின் தாக்கத்தை 50 சதவிகிதம் குறைக்க முடியும்.
2. ஒரு நாளைக்கு 10,000 அடிகள் நடப்பவர்களுக்கு 200 முதல் 300 கலோரிகளை எளிதில் எரிக்கலாம் என மருத்துவர்கள் ஆராய்ச்சிகளில் கூறியுள்ளனர்.
3. கோபம் மற்றும் மன அழுத்தம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் ஆரம்ப கட்டமாக நன்றாக நடந்து பழகிக் கொள்ள வேண்டும்.
4. வாக்கிங் செல்லும் போது காலை நேர சூரிய ஒளியில் வைட்டமின் டீ யையும் குளிர்ச்சியான நீரை பருகுவதால் மனம் மற்றும் உடல் குளிர்ச்சியாக மாறும்.
5. நடைபயிற்சி மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கிறது அத்துடன் ஆக்கப்பூர்வமான சிந்தனை திறன்களை மேம்படுத்துகிறது.
முக்கிய குறிப்பு
இதனை காலை மற்றும் மாலை நேர உடற்பயிற்சி செய்பவர்கள் தெரிந்து கொள்ளவும்.