ஒரே வாரத்தில் ஏழு கிலோ வரை உடல் எடையை குறைக்க வேண்டுமா? அப்போ இதை பாலோ பண்ணுங்க
Weight loss
Health tips
By Logeswari
உடல் எடை குறைக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்கிறது. ஆனால் அதற்கான சரியான வழிகாட்டி இல்லாமல் தவறான டிப்ஸ்களை பின்பற்றி சிக்கல்களில் மாட்டி கொள்கின்றனர்.
அசைவ உணவு சாப்பிடுபவர்களாக இருந்தாலும் உடல் எடையை ஈசியாக குறைத்து விடலாம். எடையை குறைக்க பட்டினி இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.
ஊட்டச்சத்து நிறைந்த உணவை வயிறு முழுவதும் சாப்பிட்டும் எடையை குறைக்கலாம். சரி வாங்க சரியான முறையில் உடல் எடையை எப்படி குறைப்பது குறித்து பார்க்கலாம்..
- முதலாவது நாளில் மூன்று வேளையும் பழங்களை உணவாக எடுத்து கொள்ளலாம். ஆப்பிள், மாதுளை, ஆரஞ்சு என எந்த பழங்களை வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம். இரண்டாவது நாளில் காய்களை உணவாக எடுத்து கொள்ளலாம். காய்களை சூப், சாலட், வேகவைத்து எடுத்து கொள்ளலாம்.
- மூன்றாவது நாளில் பழங்கள் மற்றும் காய்கள் இரண்டையும் எடுத்து கொள்ளலாம். மூன்றாவது நாளில் தான் கொழுப்பானது குறைய ஆரம்பிக்கும். அதிக அளவில் கலோரிகள் எரிக்க படும். இதில் இருந்து தான் எடை குறைய ஆரம்பிக்கும்.
- நான்காவது நாளில் 8 வாழை பழங்களும் 3 டம்ளர் பாலும் எடுத்து கொள்ள வேண்டும். ஒரு நாள் முழுக்க இது மட்டும் தான் உணவாக எடுத்து கொள்ள வேண்டும். ஐந்தாவது நாள் சிக்கன், மீன் , பீப் என அசைவ உணவுகளையும் 6 தக்காளிகளையும் உணவில் எடுத்து கொள்ளலாம்.
-
ஆறாவது நாளில் இறைச்சி அல்லது காய்களை எடுத்து கொள்ளலாம். தக்காளியை தவிர்த்து விடவும். ஏழாவது நாள் காய்கள் பழங்கள் எடுத்து கொள்ளலாம். இந்த ஏழு நாள் உணவுடன் 6 - 10 கிளாஸ் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடலில் நீர் சத்து சம நிலையில் வைக்க உதவும்.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US