முக அழகை இரட்டிப்பாக்கும் சமையலறைப் பொருட்கள்: நீங்களும் செய்து பாருங்க
பொதுவாக ஆரோக்கியம் என்பது உடலில் மட்டுமல்ல சருமத்திலும் பேணுவது அவசியம் ஆகும்.
சந்தையில் இருக்கும் சில அழகுசாதனப் பொருட்கள் தீர்க்க முடியாத பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
இதன் காரணமாக தான் எமது முன்னோர்கள் வீட்டிலுள்ள பொருட்களை கொண்டு சருமத்தை பராமரித்துள்ளனர்.
அந்த வகையில், வீட்டிலுள்ள மஞ்சள் பொடி, தயிர், தேன், காபி பொடி இவை முகத்தை பளபளப்பாக்கும் வேலையை செய்கிறது.
இவற்றை தாண்டி நாம் புத்துணர்ச்சிக்காக குடிக்கும் தேநீர் சரும அழகை பராமரிப்பதாக கூறப்படுகின்றது. இது தொடர்பான விரிவான விளக்கத்தை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- தண்ணீர்- 1 கப்
- சுத்தமான தேயிலை - 2 தேக்கரண்டி (கீரின் டீ, மசாலா கலந்த டீ)
- காட்டன் துணி - தேவையானது,
செய்முறை
கப்பில் தேயிலையை கலந்து நன்றாக கொதிக்க வைத்து கொள்ளவும். தேயிலைத்தூளில் இருக்கும் சாயம் தண்ணீரில் இறங்கிய பின்னர் கொதிப்பதை நிறுத்தி விடவும்.
தேயிலை மாத்திரம் தனியாக வடிக்கட்டி தேநீரை ஆற விடவும். பின்னர் வெள்ளை நிற காட்டன் துணியை நன்றாக தேநீரில் ஊற வைக்கவும்.
முகத்தை நன்றாக கழுவிய பின்னர் கிளிசரின் போட்டு கொஞ்சமாக துடைத்து கொள்ளவும். முகத்தை துடைத்த பின்னர் தேயிலையில் ஊற வைத்த காட்டன் துணியை லேசாக பிழிந்தெடுத்து முகத்தில் போட்டுக் கொள்ளவும்.
இப்படி செய்வதால் சருமத்திற்கு தேவையான ஆண்டி ஆக்ஸிடென்ட் கிடைக்கும். இப்படி செய்து வந்தால் முகத்தில் ஏற்படும் அழற்சி சுத்தமாக நின்று விடும்.
அத்துடன் முகத்திலுள்ள் கரும்புள்ளிகள், இறந்த செல்கள், கருமை, கருவளையம் இப்படியான பிரச்சினைகள் வரவே வராது.
முக்கிய குறிப்பு
கண்களுக்குள் செல்லாமல் பார்த்து கொள்ளவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |