வழுக்கை தலையில் முடி முளைக்க வைக்கும் வெந்தயம்: எப்படி சாப்பிடணும் தெரியுமா?
பொதுவாக தற்போது சிலருக்கு இளம் வயதிலேயே முடி உதிர்வு, நரைமுடி உள்ளிட்ட பிரச்சனைகள் வந்துவிடுகின்றன.
இது போன்ற பிரச்சினைகள் தவறான வாழ்க்கை முறை காரணமாக ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கொஞ்சம் கொஞ்சமாக தலைமுடி உதிர்ந்து வழுக்கையாவது போல் தெரிகிறது என்றால் மருந்து மாத்திரைகளை விட உணவு பழக்கங்களில் அதிகமாக கவனம் செலுத்தினால் நிரந்தர தீர்வை பெறலாம்.
அந்த வகையில், தலைமுடி பிரச்சினைகள் அதிகமாக இருப்பவர்கள் முளைகட்டிய தானியங்களை சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும் என கூறப்படுகின்றது.
அப்படியாயின் முளைக்கட்டிய வெந்தயத்தை சாப்பிடலாமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். வெந்தயம் சாப்பிடுவதால் தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்தவும், புதிய முடிகள் செழித்து வளர வைக்கவும் முடியும்.
இது போன்று வேறு என்னென்ன நன்மைகளை முளைகட்டிய வெந்தயம் தருகிறது என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
முளைக்கட்டிய வெந்தயம்
1. முளைக்கட்டிய வெந்தயத்தை உணவில் சேர்த்து கொள்வதால் தலைமுடி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஏனெனின் வெந்தயத்தில் பயோட்டின் இருக்கிறது இது வேர்க்கால்களை பலமாக்கி முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
2. அதே போன்று வெந்தயத்தில் புரதம், வைட்டமின் பி6 மற்றும் போலிக் அமிலம் உள்ளிட்ட சத்துக்கள் இருக்கின்றன. இது தலைமுடியை அடர்த்தியாக்கி அழகு பார்க்கும்.
3.முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிடும் ஒருவருக்கு துத்தநாகம், மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி இப்படி ஏகப்பட்ட கனிமங்கள் உடலுக்குள் போய் சேரும்.
4. வெந்தயத்தை உள்ளப்படி சாப்பிடுவதை விட அதனை முளைக்கட்ட வைத்து சாப்பிடுவதால் உடலுக்கும் நன்மை அதிகம்.
வெந்தயத்தை முளைக்கட்ட வைப்பது எப்படி?
முதல் நாள் இரவு வெந்தயத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வைத்து விட்டு, காலையில் எழுந்து வெறும் வயிற்றில் வெந்தய தண்ணீரை குடிக்க வேண்டும். பின்னர் அதன் வெந்தயத்தை வீசாமல் ஒரு பருத்தி துணியில் கட்டி வைத்து விடவும்.
அடுத்த நாள் காலையில் பார்த்தால் அது முளைக்கட்டி இருக்கும். தனியாக சாப்பிடலாம். அப்படி சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள் அதனுடன் சிறிது உலர் பழங்கள், நறுக்கிய வெங்காயம், தக்காளி, எலுமிச்சை சாறு, கேரட், வெள்ளரிக்காய், சிறிதளவு உப்பு சேர்த்து சாலட் போல் செய்து சாப்பிடலாம்.
இதனை வாரத்திற்கு 2 முறை எடுத்து கொள்ளலாம்.
முக்கிய குறிப்பு
வாரத்தில் இரண்டு தடவைக்கு மேல் சாப்பிட்டால் மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மை ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.