குளிர்காலத்தில் சருமத்தை பாதுகாக்க சிரமப்படுகிறீர்களா? அப்போ இதுதான் பெஸ்ட் சாய்ஸ்
பொதுவாகவே பால் ஒரு நிறையுணவாக காணப்படுகின்றது. உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமன்றி சரும ஆரோக்கியத்திலும் பால் முக்கிய இடம் வகிக்கின்றது.
தினமும் ஒரு டம்ளர் பால் குடிப்பதால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படாது என்று வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். பால் பல்வேறு தோல் பிரச்சனைகளை நீக்குகிறது.
குளிர்காலம் வந்துவிட்டால் சருமம் அதனை இலகுவில் ஏற்றுக்கொள்ளாது வறண்டு போதல் சருமம் பொலிவிழத்தல் போன்ற பிச்சினைகள் ஏற்படுகின்றது. அதனை பாலை கொண்டு எவ்வாறு சரிசெய்யலாம் என்பது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
சரும பாதுகாப்பு
வீட்டில் பளபளப்பான சருமத்தைப் பெற, ஒரு பருத்தி உருண்டையை பச்சை பாலில் நனைத்து, முகத்தில் தடவவும். கைகளாலும் மசாஜ் செய்யலாம். பின்னர் உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், சரும வறட்சி நீங்கி ஈரப்பதமாகவும் மிருதுவாகவும் மாறும்.
பாலில் வைட்டமின் ஏ, டி மற்றும் ஈ உள்ளது. அவை சருமத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்களாக செயல்படுகின்றன. அவை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கின்றன. முன்கூட்டிய தோல் வயதானதைத் தடுக்கிறது.
மாதவிடாய் நின்ற பிறகும் சருமத்தை பராமரிக்க பால் உங்கள் உணவில் இருக்க வேண்டும். பச்சைப் பாலை தினமும் முகத்தில் தடவினால் சருமம் சுத்தமாகும். இது சருமத்தில் இயற்கையான சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது.
இது சருமத்திலுள்ள இறந்த செல்களை நீக்குகிறது. இது சருமத்தை பொலிவுடன் வைத்திருக்க துணைப்புரிகின்றது. குளிர்காலத்தில் தோல் வறண்டு போகும். ஆனால் பச்சை பாலில் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், இந்தப் பிரச்சனையை எளிதில் நீக்கிவிடலாம்.
பாலில் ஈரப்பதமூட்டும் பொருட்கள் உள்ளன. அவை சருமத்தை ஈரப்பதமாக்குகின்றன. மேலும், இதில் உள்ள இயற்கையான கொழுப்பு, புரதம் மற்றும் நீர் ஆகியவை சருமத்தை மென்மையாக்குகிறது. குளிர்காலத்தில் வறண்ட சருமம் தவிர, பல்வேறு சரும பிரச்சனைகள் ஏற்படும்.
பருக்கள் முதல் அரிப்பு வரை, சொறி பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்தப் பிரச்சனைகளில் இருந்து விடுபட, பச்சைப் பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சளைக் கலந்து பருக வேண்டும். இந்த அழற்சி எதிர்ப்பு பொருள் தோலில் உள்ள தொற்றுநோயை நீக்குகிறது.
என்றும் இளமையாக இருக்க நினைப்பவர்கள் தினசரி பாலில் சிறிதளவு தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்களின் பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் சருமம் என்றும் இளமையாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |