தலைமுடி பிரச்சினைக்கு மின்னல் வேகத்தில் தீர்வு கொடுக்கும் கை மருந்து..இப்படி செய்து பாருங்க!
பொதுவாக தற்போது இருக்கும் பெண்களுக்கு தலைமுடி உதிர்வு பெரும் பிரச்சினைகளில் ஒன்றாக இருந்து வருகின்றது.
அடர்த்தியாக இருக்கும் முடி நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக கொட்ட ஆரம்பித்து அதனை கண்டுக் கொள்ளவில்லையென்றால் நம்மை சொட்டையாக்கும் வரை கொட்டி கொண்டே தான் இருக்கும்.
இது ஊட்டச்சத்துக்கள் குறைபாடு, ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள், முறையற்ற பராமரிப்பு ஆகிய காரணங்களினால் இந்த பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
அந்த வகையில் மூலிகையாக பயன்படுத்தும் இஞ்சி, தலைமுடி பிரச்சினைகளுக்கும் தீர்வாகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன.
தலைமுடி பிரச்சினைக்கும் இஞ்சிக்கும் என்ன தொடர்பு என்பதனை தொடர்ந்து தெளிவாக தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
இஞ்சி சாறு வைத்தியம்
முதலில் இஞ்சி சாறை எடுத்து நன்றாக கலந்து ஒரு போத்தலில் வைத்து கொள்ளவும்.
பின்னர் தலைக்கு குளிப்பதற்கு முன்னர் சாற்றை முடி மற்றும் சருமம் ஆகியவற்றில் படும்படி நன்றாக தேய்த்து மசாஜ் செய்து கொள்ளவும்.
ஈரப்பதம் உலரும் வரை நன்கு முடியின் வேர்க்கால்களில் தேய்த்துக் கொண்டிருக்கவும். சரியாக 10 நிமிடங்களுக்கு பின்னர் தலையை நன்றாக அலசி கொள்ளவும்.
இதனை வாரத்திற்கு இரண்டு தடவைகள் சரிச் செய்து வர வேண்டும்.
இவ்வாறு செய்து வந்தால் தலைமுடி பிரச்சினை நீங்கி ஆரோக்கியமான நீளமான கூந்தல் கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |