அசுர வேகத்தில் முடி வளரணுமா? தேங்காய் பாலை இப்படி பயன்படுத்துங்க
பொதுவாகவே அனைவருக்கும் சருமத்தையும் உடலையும் அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருக்கும்.
அதிலும் முடியை அடர்த்தியாக வளர வைக்க பெண்கள் தீவிர முயற்சியில் ஈடுபடுவார்கள்.
அந்தவகையில் தேங்காய் பால் வைத்து எப்படி முடியை நீளமாகவும் அடர்த்தியாகவும் பளபளப்பாகவும் மாற்றலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
முடி வளர்ச்சிக்கு தேங்காய் பால்
தேங்காய் பால் சிறந்த மென்மையாக்கும் பண்புகளைக் கொண்ட ஒரு இயற்கை ஈரப்பதமூட்டியாகும்.
முடியில் ஈரப்பதத்தைப் பூட்டி வைக்கும் திறன் தேங்காய் பாலை வறண்ட மற்றும் சுருண்ட கூந்தலுக்கு ஏற்றதாக ஆக்குகிறது.
தேங்காய் பாலில் உள்ள கொழுப்பு அமிலங்கள் முடியின் தண்டுக்குள் ஆழமாக ஊடுருவி, ஒவ்வொரு இழையையும் ஈரப்பதமாக்கி மென்மையாக்குகின்றன.
இதன் விளைவாக மென்மையான, பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான தோற்றமுடைய கூந்தல் கிடைக்கிறது.
தேங்காய்ப் பாலை எப்படிப் பயன்படுத்துவது?
- முதலில் உங்கள் உச்சந்தலையில் தேங்காய் பால் கொண்டு மசாஜ் செய்யவும். இது இரத்த ஓட்டத்தைத் தூண்டவும் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் நமக்கு உதவும்.
- ஊட்டச்சத்துக்கள் முடி வேர்களுக்குள் ஊடுருவ நீங்கள் குறைந்தது 20-30 நிமிடங்கள் அதை அப்படியே விடவும்.
- இதை விட உங்களுக்கு கூந்தல் மிகவும் வேகமாக வளர ஆசை இருந்தால் நீங்கள் தேங்காய் பாலில் சில துளிகள் ரோஸ்மேரி அல்லது ஆமணக்கு எண்ணெய்யை கலக்கலாம்.
- இந்த படிமுறையை வறண்ட கூந்தல் உடையவர்கள் வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்தலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |