AC போட்டுட்டே காரை Start பண்ற பழக்கம் இருக்கா? மறந்தும் கூட இந்த தப்ப இனி பண்ணிடாதீங்க
இந்தியாவில் தற்போது பெரும்பாலனவர்கள் கார் வாங்கி பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.
கார் வாங்கினால் மட்டும் போதாது மாறாக காரை எப்படி பராமரிப்பது என்பதையும் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையெனில் ஆயிரக்கணக்கில் செலவு செய்து பழுது பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
அதிலும் குறிப்பாக ஏசி மற்றும் இன்ஜினில் சுமையை குறைக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் அவற்றை சரியாக பழுதுப் பார்க்க மாட்டார்கள்.
சிலர் காரில் ஏறியவுடன் ஏசியை ஆன் செய்து விட்டு தான் காரை ஸ்டார்ட் செய்வார்கள். இப்படியான சில தவறுகளால் காரின் ஏர் கண்டிஷனிங் சிஸ்டம் விரைவில் பழுதடைய வாய்ப்பு இருக்கிறது.
வாகனத்தின் ஆயுட்காலத்தை கூட்ட வேண்டும் என நினைப்பவர்கள் குறிப்பிட்ட சில விடயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
அந்த வகையில் கார் பாவணையாளர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பழக்கங்கள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
காரிலுள்ள ஏசியை இப்படி சரிப் பார்க்கவும்.
1. காரிலுள்ள ஏசி சிஸ்டத்தை பராமரிக்க சரியானதொரு திட்டத்தை கையாளுங்கள். நீங்கள் சிபாரிசு செய்யும் டெக்னீஷியன் கம்ப்ரசர், கன்டென்சர் மற்றும் குளிர்பதன நிலைகள் போன்ற பாகங்களை ஆய்வு செய்து சர்வீஸ் செய்ய வேண்டும். இதனை உறுதிப்படுத்திய பின்னரே அடுத்த நடவடிக்கைகளை கையாளவும்.
2. சிலருக்கு ஏசி பயன்படுத்தும் தேவை இருக்காது. இப்படியான சந்தர்ப்பங்களில் வாரத்திற்கு ஒருமுறையாவது சில நிமிடங்கள் ஏசியை ஆன் செய்து வைத்திருக்கவும். இது ஏசி சிஸ்டத்தை உயவூட்டுவதற்கு உதவுகிறது.
3.காரிலுள்ள குளிரூட்டியின் செயல்திறன் குறைவது போன்று தோன்றினால் உடனடியாக சர்வீஸ் செய்யவும். அதோடு பயன்படுத்தும் போது கம்ப்ரசரை சேதப்பட வாய்ப்புள்ளது.
4. கேபின் ஏர் ஃபில்டர் 12,000 முதல் 15,000 மைல்களுக்கும் சரிபார்த்து மாற்றிக் கொள்ளவும். அடைபட்ட ஃபில்டரை சுத்தம் செய்வது அவசியம். இப்படி செய்து வந்தால் ஏசியின் செயல்திறனை அதிகப்படுத்தலாம்.
5. கண்டன்சர் மற்றும் எவபிரேட்டர்களில் குப்பைகள் இல்லாமல் இருக்க வேண்டும். மாறாக வீதியிலுள்ள இலைகள், அழுக்கு மற்றும் பிற தடைகள் அடைப்பட்டு செயல்திறன் குறைவடைய வாய்ப்பு இருக்கிறது. இதனால் வாகனத்திற்குள் அதிக வெப்ப ஏற்படலாம்.