கொடுமையான பல்வலியா? இந்த விஷயத்த ஃபாலோ பண்ணுங்க... இனி வலியே வராது...
உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரைப்படி, வாய்வழி மூலம் ஏற்படும் நோய் தான் நான்காவது விலை உயர்ந்த நோயாகும்.
இதற்கு சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், இது பல உடல் நலப் பிரச்சனைகளுக்கு காரணமாவதோடு, உடலின் ஆரோக்கியத்தையும் இது பாதிக்கும். உ
தாரணமாக, நாள்பட்ட ஈறு நோய் உங்களுக்கு ஏற்படும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதை கடினமாக்கும். பற்களில் உள்ள அதிகப்படியான பாக்டீரியாக்கள் உடலில் வீக்கத்தை ஏற்படுத்தும்.
இதுபோன்ற பிரச்சனைகளுக்கு சில ஆயுர்வேத நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் வாய்வழி சுகாதாரமின்மையால் ஏற்படும் விளைவுகளைத் தடுக்கலாம். அது போன்ற ஆயுர்வேத குறிப்புகள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.
வேப்பமரக் குச்சியை மெல்லுங்கள்
வேம்பு என்று அழைக்கப்படும் வேப்ப மரத்தின் இலை மற்றும் பட்டைகள் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
வேப்ப மரக் குச்சியை மெல்லும் போது அதில் உள்ள எதிர்ப்புப் பண்புகள் உமிழ்நீருடன் கலந்து வாயில் உள்ள தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை கொல்லும்.
மேலும், இது பற்களில் பாக்டீரியா சேர்வதையும் தடுக்கிறது. உங்களின் விரல் அளவு உள்ள சிறு வேப்பங்குச்சி ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் மேல் உள்ள அதன் தோலை உரித்து விட்டு, ஒரு முனையை மென்று அதனை பிரஷ் போல ஆக்கிக் கொள்ளுங்கள்.
அதனைக் கொண்டு உங்களின் பற்களை துலக்குங்கள். ஈறுகளிலும் அந்த குச்சியைக் கொண்டு சிறுது நேரம் துலக்கி விட்டு, பின் உங்களின் வாயைக் கொப்பளித்தால் போதும்.
மூலிகைகளைக் கொண்டு பல் துலக்குதல்
சில தேர்ந்தெடுக்கப்பட்ட மூலிகைகள் மற்றும் மசாலா பொருட்களைக் கொண்டு உங்களின் பற்களை துலக்குவது, உங்களின் பற்களுக்கு சிறந்த கிளீனர்களாக செயல்படும்.
இந்த மூலிகைகள் மற்றும் மசாலா பொருட்கள் உங்களுக்கு ஏற்படும் அனைத்து வகையான பற்களின் கோளாறுகளை தடுப்பதோடு அவற்றை குணப்படுத்தவும் உதவுகின்றன.
பூண்டு, கல் உப்பு, கொய்யா இலைகள் மற்றும் மாமர இலைகள் போன்றவற்றைக் கொண்டு பல் துலக்கலாம். இதனை ஏதேனும் ஒன்றை அரைத்து பற்களில் தேய்க்கலாம்.
அரைத்த பொருளுடன் எண்ணெய் மற்றும் உப்பு கலவையை சேர்த்தும் பயன்படுத்தலாம். இது உங்களின் ஈறுகளை பலப்படுத்த உதவுகிறது.
நாக்கை சுத்தப்படுத்தல்
பற்கள் மட்டுமின்றி நாக்கிலும் பாக்டீரியாக்கள் மற்றும் நச்சுகள் தேங்குகின்றன. இது, வாய் துர்நாற்றத்திற்கு வழிவகுக்கிறது. நாக்கை சுத்தம் செய்வது, வாயில் உள்ள நச்சுகளை நீக்கி புதிய சுவாசத்தை ஊக்குவிக்கிறது.
அதோடு, சுவை, செரிமானம் மற்றும் வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் நாக்கு சுத்தம் தேவை. சரியான நாக்கு சுத்தப்படுத்தியைப் பயன்படுத்தி தினமும் உங்களின் நாக்கை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்.