AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மனைவியை தேர்ந்தெடுத்த இளைஞர்
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரஷ்யாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் மனைவியை தேர்ந்தெடுத்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு என அழைக்கப்படும் AI தொழில்நுட்பத்தின் சாட்ஜிபிடி(ChatGPT) அம்சத்தை ரஷ்ய வாலிபர் ஒருவர் ஆன்லைன் டேட்டிங்கிற்காக பயன்படுத்தியுள்ளார்.
ரஷ்யாவை சேர்ந்த என்ற சாப்ட்வர் டெவலப்பரான (software developer) அலெக்சாண்டர் ஜாதன் இதனை செய்துள்ளார்.
அலெக்சாண்டர் ஜாதன் தனக்கு பொருத்தமான பெண்ணை டிண்டர் போன்ற டேட்டிங் செயலில் கண்டறிய செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மற்றும் அதன் சாட்ஜிபிடி(Chatbot) அம்சத்தை பயன்படுத்தியுள்ளார்.
இதன் மூலம் கிட்டத்தட்ட 5 ஆயிரம் பெண்களிடம் பேசிய அலெக்சாண்டர் ஜாதன், இறுதியில் கரினா என்ற பெண் தனக்கு பொருத்தமானவர் என்று AI தொழில்நுட்பம் அடையாளம் காட்டியதாக தெரிவித்துள்ளார்.
அலெக்சாண்டர் ஜாதன் சுமார் 1 வருட காலம் தனது சரியான பொருத்தத்தை கண்டுபிடிக்க எடுத்துக் கொண்டுள்ளார்.