பனிக்காலத்தில் தயிர் கெட்டியாகவில்லையா? அப்போ இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்- செய்து பாருங்க
பொதுவாக வீடுகளில் சப்பாத்தி, தோசை, சோறு, பிரியாணி, வெஜிடபிள் ரைஸ் உள்ளிட்ட உணவுகள் செய்யும் போது தயிர் பயன்படுத்துவார்கள்.
சில வீடுகளில் தயிர் பிரியர்களுக்கு என்ன உணவு சாப்பிட்டாலும், செய்தாலும் தயிர் இருந்தாக வேண்டும். இது போன்ற சமயங்களில் கடைகளில் வாங்கும் தயிரை விட வீட்டிலேயே பால் காய்ச்சி தயிர் செய்தால் உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும்.
பாலை விட தயிரில் அதிக நல்ல பாக்டீரியாக்கள் இருக்கும். அதனை பயன்படுத்தி தயிரை கெட்டியாக மாற்றலாம்.
பனிக்காலம், குளிர்காலத்தில் தயிர் உறைய வைப்பது என்பது சற்று சவாலான விடயமாகும். மாறாக கோடை காலத்தில் குறுகிய நேரத்திலேயே தயிர் உறைந்துவிடும்.
அந்த வகையில் தயிரை எப்படி பனிக்காலம் மற்றும் குளிர்காலத்தில் கெட்டியாக உறைய வைப்பது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தயிரை உறைய வைக்க டிப்ஸ்
1. வீட்டில் தயிர் கெட்டியாகவில்லையென்றால் அந்த சமயத்தில் முழு கொழுப்பு நிறைந்த பாலை சுண்டும் அளவிற்கு கொதிக்க வைக்கவும். பின்னர், காய்ச்சி ஆற்றிய பாலை சிறிதளவு தயிரில் சேர்த்து கலந்து விட்டால் தயிர் கெட்டியாக மாறும்.
2. நன்றாக காய்ச்சி ஆற வைத்த பாலை பீட் செய்து விட்டு பாலை கொதிக்க வைக்கவும். அப்போது வரும் பாலாடையை தயிருடன் கலந்து விடலாம்.
3. வீட்டில் தயிர் செய்யும் போது மிதமான சூட்டில் தயிரை உறைய வைக்கவும். பின்னர் ஒரு மண் பாத்திரத்தில் தயிரை மாற்றி அப்படியே விட்டு விடவும். எந்த காரணம் கொண்டும் ப்ராசஸில் வைக்க வேண்டாம்.
4. பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய் மிதமான சூட்டில் உள்ள பாலில் சேர்த்தால் அது சீக்கிரம் தயிரை உறைய செய்யும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |