ஒருவரிடம் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ அவருக்கு உங்களை மிகவும் பிடித்திருக்குன்னு அர்த்தம்
பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவரும் மற்றவர்களின் அன்புக்காகவும் அக்கறைக்காகவும் நிச்சயம் ஏங்குவார்கள்.
ஆனால் இதனை குறிபிட்ட சிலர் மட்டுமே வெளிப்படையாக சொல்கின்றார்கள் ஏனையோர் ஈகோ காரணமாக இதனை வெளிப்படுத்த தயங்குகின்றார்கள் என உளவியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.
காதல் தோல்வி மற்றும் துரோகங்களால் பாதிக்கப்பட்ட பின்னர் உறவுகளின் மீது ஏற்படுகின்ற ஒருவித வெறுப்பு மற்றும் மீண்டும் உறவுகளை இழந்துவிடுவோம் என்ற பயம் காரணமாக சிலர் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள நினைக்கின்ற போதிலும் உண்மையில் அவர்களால் உறவுகள் வேண்டாம் என்ற முடிவுக்கு வரமுடியாது.
அப்படி சிலர் நினைத்தாலும் இவர்களால் வாழ்நாள்முழுவதும் அப்படி வாழ முடியுமா என்பது கேள்விக்குறியே. காரணம் மனிதர்கள் மற்றவர்களால் ஈர்க்கப்படுவதை இயற்கையாகவே விரும்புகின்றார்கள்.
மனிதர்களின் ஆடை தெரிவுகள், ஒப்பனைகள் சிகை அழங்காரங்கள் ஆடம்பர வீடு, கார் மற்றும் போன் உட்பட அனைத்தும் மறைமுகமாக இதை தான் வெளிப்படுத்துகின்றது. உளவியல் ரீதியாக மனிதர்கள் எப்போது மற்றவர்களால் விரும்பப்படுவதை விரும்புகின்றார்கள்.
இதில் உண்மையில் ஒரு அலாதி இன்பம் இருக்கத்தான் செய்கின்றது. அதனால் தான் இத்தனை சமூக வளைத்தளங்கள் பெருகிக்கிடக்கின்றன.மனிதர்களின் உளவியலை அடிப்படையாக வைத்தே இவை இயங்குகின்றன.
அந்த வகையில் ஒருவர் உங்கள் மீது ஆர்வமாக இருக்கின்றார். உங்களை விரும்புகின்றார் என்பதை எவ்வாறு அவர்களின் செயல்களின் மூலம் அறிந்துக்கொள்ளலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
எப்படி அறியலாம்?
ஒருவர் உங்களைப் பார்க்கும் விதம் அவர்களின் மனதை வெளிப்படுத்துகின்றது. நீங்கள் பேசும் போது உங்கள் முகத்தை ஸ்கேன் செய்வது போல் பார்த்துக்கொண்டிருப்பார்கள்.கண்கள், உதடுகள், முடிகள் என மீண்டும் மீண்டும் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். நீங்கள் அவர்களுடன் இருக்கும் வரையில் உங்களின் மீதே முழு கவனத்தையும் வைத்திருப்பார்கள்.
யாராவது உங்களை விரும்புகின்றார்கள் என்றால் உங்களின் குடும்பம் மற்றும் நண்பர்கள் பற்றி அறிந்துக்கொள்வதில் அதிக ஆர்வம் காடடுவார்கள். உங்களுடன் நெருக்கமாக இருக்க கிடைக்கும் சின்ன சின்ன வாய்ப்புகளையும் தவறவிட மாட்டார்கள்.
அவர்கள் மற்றவர்களிடம் புன்னகை செய்யும் விதத்துக்கும் உங்களை பார்க்கும் போது புன்னகை செய்யும் விதத்துக்கும் இடையில் சிறிய வித்தியாசம் இருக்கும். உங்களிடம் அதிக அக்கறையாக நடந்துக்கொள்வார்கள்.
நீங்கள் மற்றவர்களிடம் உதவி கேட்பதை அவர்கள் விரும்பவில்லை என்றாலோ இதற்கு கோபப்படுகின்றார்கள் என்றாலோ இவர்கள் உங்களை மிகவும் நேசிக்கின்றார்கள் என்று அர்த்தம்.
உங்களின் அருகில் இருக்கும் போது ஒருவர் முகத்தில் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படுகின்றது என்றாலும் இவர்கள் உங்களை மகிழ்ச்சிப்படுத்த அதிக முயற்சி எடுக்கின்றார்கள் என்றாலும் அவர்களுக்கு உங்களை பிடித்திருக்கின்றது என்று அர்த்தம்.
ஒருவருக்கு உங்களின் அருகாரமையில் இயல்பாக இருக்கமுடியவில்லை என்றால் அல்லது பதற்றமாக உணர்ந்தால் இவர் உங்களை விரும்புகின்றார் என்பதை உணர்ந்துக்கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |