ஒரு வருடம் ஆனாலும் பச்சை பட்டாணி கெட்டுப்போகாமல் இருக்கனுமா? இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க
பச்சை பட்டாணி தற்போது சீசன் என்பதால் இதனை வாங்கி ஸ்டோர் செய்ய பலரும் ஆசைப்படுவார்கள். அவ்வாறு ஒரு வருடம் வரை கெட்டுப்போகாமல் எவ்வாறு சேமிக்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
பச்சை பட்டாணி
சத்துக்கள் அதிகம் கொண்ட காய்களில் ஒன்று தான் பச்சை பட்டாணி. இவை அந்தந்த பருவத்திற்கு மட்டுமே வரும் என்பதால் இதன் விலை தாறுமாறாக உயர்ந்து உள்ளது.
அந்த வகையில் தற்போது விலை சற்று குறைவாக விற்கப்படும் பச்சை பட்டாணியினை ஒருவருடம் வரை சேமிக்க சில வழிகளை தெரிந்து கொள்வோம்.

பொதுவாக பச்சை பட்டாணியை உரிப்பதற்கு சற்று கஷ்டமாகவே இருக்கும். இதனை சுலபமாக உரிப்பதற்கு அகலான பாத்திரம் ஒன்றில் தோலுடன் பச்சை பட்டாணியை போட்டு, அவை மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் மட்டும் வைத்து இறக்கவும்.
பின்பு அதன் தோல் மிகவும் லேசாக வந்துவிடுமாம். உள்ளே இருக்கும் பட்டாணியையும் நாம் எளிதில் எடுத்துக் கொள்ளலாம். மேலும் தோல் உரித்த பட்டாணியை ஈரப்பதம் இல்லாமல் வெளியே காய வைத்து பின்பு சேமிக்கவும்.

எவ்வாறு சேமிக்கலாம்?
உரித்து ஈரம் இல்லாமல் இருக்கும் பட்டாணியை ஜிப் லாக் கவர் ஒன்றில் போட்டு, 1 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து நன்கு குலுக்கிவிட்டு, பின்பு ஃப்ரீசரில் ஸ்டோர் செய்தால் கெடாமல் இருக்கும்.
உரித்த பட்டாணியில் எலுமிச்சை சாறு பிழிந்து நன்றாக குலுக்கிவிட்ட பின்பு ஜிப் லாக் கவரில் போட்டு ஃப்ரீசரில் வைத்தாலும் ஒரு வருடம் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.

image: shutterstock
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |