கஷ்டப்பட்டு வளர்த்த நகங்கள் சட்டுனு உடைஞ்சிடுதா? அப்போ இதை பண்ணுங்க
பொதுவாகவே பெண்கள் தங்களின் நகங்களில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். நீளமான நகங்களை வளர்க்க வேண்டும் என்ற ஆசை எல்லா பெண்களுக்குமே இருக்கும்.
சில பெண்களுக்கு தண்ணீரில் அதிகம் வேலை செய்யும் போது பல நாள் பாதுகாப்பாக வளர்த்த நகம் உடைந்துவிடும். இது பெண்களுக்கு மனதளவில் பாரிய கவலையை கொடுக்கும்.
இந்த பிரச்சினைக்கு ஏற்பவதற்கு என்ன காரணம் மற்றும் இதற்கு முடிவுக்கட்டுவதற்கு வீட்டிலேயே மேற்கொள்ளக் கூடிய சில விடயங்கள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
நகம் உடைவதற்கான காரணங்கள்
அடிக்கடி கை கழுவுவதாலும் கடினமான ரசாயனங்கள் கலந்த பொருட்களை கைகளில் படும் வகையில் பயன்படுத்துவதாலும் அதிக நேரம் தண்ணீரில் வேலை செய்வதாலும் நகங்கள் எளிதில் பாதிப்படைகின்றது. இதனால் நகங்கள் அடிக்கடி உடைந்து போகின்றன.
வயது அதிகரிக்கும் போது பொதுவாக நகங்களின் வளர்ச்சி குறைய ஆரம்பிக்கின்றது. ஊட்டச்சத்து குறைப்பாடு காரணமாகவும் நகங்கள் பலவீனமடைகின்றன. இது நகங்கள் உடைய காரணமாகின்றது.
தைராய்டு பிரச்சனை, தோல் நோய்கள், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பிரச்சினைகளாலும் நகங்களின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு நகங்கள் அடிக்கடி உடைய கூடும்.
அடிக்கடி நகங்களில் ரசாயனம் கலந்த ஜெல் பயன்படுத்துவது, கடினத்தன்மை வாய்ந்த நெயில் பாலிஷ்கள் பாவனை போன்றன காரணமாகவும் நகங்கள் உடையலாம்.
நகங்களை எவ்வாறு பாதுகாக்கலாம்?
சுத்தம் செய்யும் வேலைகளில் ஈடுப்படும் போது கையுறை அணிந்து கொள்வதன் மூலம் தண்ணீர் உங்கள் கைகளில் படுவதை தவிர்த்துக்கொள்ளலாம் இதன் மூலமும் நகங்கள் உடைவதை தடுக்கலாம்.
அடிக்கடி ஜெல்களை பயன்படுத்துவதனாலும் ரசாயனம் நிறைந்த பாலிஷ்களை அதிகமாக பாவிப்பதாலும் நகங்கள் பாதிப்பிற்குள்ளாகும். இவற்றை தவிர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
புரதம் மற்றும் பயோடின் நிறைந்த உணவு முறையை பின்பற்ற வேண்டும். இவை நகங்களின் முக்கிய கூறுகளாக உள்ள கெராடின் வலிமையாவதற்கு உதவும். அதனால் நகங்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
நகங்களை கடிப்பதனாலும் நகம் பாதிப்படைந்து நகம் உடைய ஆரம்பிக்கும். எனவே நகம் கடிக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
இரவில் பெட்ரோலியம் ஜெல்லி பயன்படுத்தி நகங்களை மசாஜ் செய்வதாலும் நகங்களை வெதுவெதுப்பான நீரில் கழுவுவதாலும் இயற்கையான எண்ணெய் வகைகளால் நகங்களை மசாஜ் செய்வதாலும் நகங்களின் ஆரோக்கியம் மேம்படும்.
மன அழுத்தம் அதிகமாகினால் உடலில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படும் எனவே மன அழுத்தத்திற்கு முறையான சிகிச்சை எடுத்துக்கொள்வதும் நகங்களின் ஆரோக்கியத்திற்கு துணைப்புரியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |