உலகில் அசைவ உணவுக்கு தடை விதித்த ஒரே நகரம்! எங்குள்ளதுன்னு தெரியுமா?
பொதுவாகவே ஒவ்வொரு தனிப்பட்ட மனிதர்களுக்கும் கலாசார மற்றும் மத ரீதியான விரும்பு வெறுப்புக்கள் இருப்பது போல் நாடுக்கு இடையிலும் இவ்வாறான விடயங்களில் வேறுபாடுகள் காணப்படுன்றது என்பதே நிதர்சனம்.
குறிப்பாக ஒவ்வொரு நாடுகளிலும் வாழும் மக்களும் வெவ்வேறு வகையான உணவு பழக்கம், கலாசாரம், மொழி, மதம் என்பவற்றை பின்பற்றுகின்றார்கள்.

அந்தவகையில், உணவு முறை என்று மட்டும் எடுத்துக்கொண்டால், சைவ உணவுகளை மட்டும் உண்ணுபவர்கள், அசைவ விரும்பிகள் , வீகன் உணவு முறையை பின்பற்றுபவர்கள், என பல வகையில் பிரிவினர் இருக்கின்றார்கள்.
அது தனிப்பட்ட ரீதியில் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கும் விருப்பம். ஆனால் உலகில் ஒரே ஒரு நகரத்தில் மாத்திரம் அசைவம் சாப்பிடுவது முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?

ஆம் குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பாலிதானா நகரம் அசைவ உணவு விற்பனை மற்றும் நுகர்வுக்கு தடை விதித்த உலகின் முதல் நகரம் என்ற பெயரை பெற்றுள்ளது. அதன் பின்னணியில் இருக்கும் காரணம் குறித்து விரிவாக விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
என்ன காரணம்?
பாலிதானா நகரில் உள்ள 250க்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகளை மூடுமாறு கோரி 200க்கும் மேற்பட்ட சமண துறவிகள் நடத்திய போராட்டத்தின் விளைவாக இந்த முடிவு பெறப்பட்தாக குறிப்பிடப்படுகின்றது.
அந்த வகையில் பாலிதானா நகரம் அசைவ உணவு விற்பனை மற்றும் நுகர்வுக்கு தடை விதித்த உலகின் முதல் நகரமாக அறியப்படுகின்றது.

பாலிதானாவில் உணவு என்பது தூய்மை மற்றும் அகிம்சையை மையமாகக் கொண்ட சமண தத்துவத்தின் பிரதிபலிப்பாகும்.
மண்ணில் உள்ள உயிரினங்களுக்கு தீங்கு விளைவிப்பதைத் தடுக்க வெங்காயம், பூண்டு மற்றும் உருளைக்கிழங்கு போன்ற வேர் காய்கறிகளைக் கூட இவர்கள் உணவில் சேர்த்துக்கொள்வதை தவிர்த்து வருகின்றார்கள்.

இங்குள்ள பல சமணர்கள் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களையும் தவிர்ப்பதால், இப்பகுதியில் உள்ள உணவகங்கள் மற்றும் வீடுகளில் சைவ அல்லது மண்ணிற்கு அடியில் விளையாத உணவுகள் மட்டுமே காணப்படும்.
அவ்வாறான முடிவு எட்டப்பட முக்கிய காரணம் இப்பகுதியில் குறிப்பிடத்தக்க கலாச்சார மற்றும் மத மாற்றத்தைக் குறிக்கிறது.
இது சமணத்தின் வலுவான செல்வாக்கையும் அதன் கொள்கைகளையும் பிரதிபலிப்பதன் காரணமாகவும் சமண துறவிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும் இங்கு அசைவ உணவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |