முடி உதிர்வை கட்டுப்படுத்தனுமா? அப்போ இதையெல்லாம் செய்யாதீர்கள்
முகம் மற்றும் உடல் பாராமரிப்புக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ கூந்தல் தொடர்பிலும் அந்தளவு முக்கியத்துவம் கொடுப்பது முக்கியம்.
ஏனெனில் முகத்தின் அழகை நிர்ணயிப்பதில் கூந்தல் முக்கிய பங்கு வகிக்கின்றது. தற்காலத்தில் ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி முடி உதிர்வது மிகப்பெரும் பிரச்சினையாகவுள்ளது.
தற்போது சூழல் மாசு மற்றும் தவறான உணவுப்பழக்கம் ஆகியவற்றின் மூலம் முடி அதிகளவில் பாதிக்கப்படுகின்றது. இதனால் கூந்தல் வறட்சியடையடைகின்றது.
கூந்தல் பராமரிப்பு முறைகள்
வறண்ட, உடையக்கூடிய மற்றும் பிளவுபட்ட முனைகளானது கூந்தலை உடைப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது, மேலும் கூந்தல் நுனிகளுக்கு அருகில் அதிக அளவில் சேதமடைவதற்கான வாய்ப்பும் உள்ளது.
எனவே, ஆறு முதல் எட்டு வாரங்களுக்கு ஒருமுறை வீட்டிலோ அல்லது சலூனிலோ முடியை டிரிம் செய்து கொள்வது ஆரோக்கியமாக இருக்க உதவும். இதன் மூலம் முடி உதிர்வை கட்டுப்படுத்தலாம்.
சேதமடைந்த முடியானது பார்ப்பதற்கு வைக்கோல் போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும், எனவே முடியின் வளர்ச்சியை மேம்படுத்தவும் பிளவுபட்டிருக்கும் முடியின் முனைகளை அகற்றுவதற்கும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் முடியை டிரிம் செய்ய வேண்டியது அவசியம்.
மேலும், உங்களுடைய தலைமுடியை டிரிம் செய்வதற்கு முன்பு ஷாம்பு போட்டு முடியை அலசிக் கொள்ளவும், உங்களுடைய தலைமுடியை அலசும்போது கண்டிஷனரைப் பயன்படுத்தவும்.
முடி உதிர்தல் உட்பட பல உடல்நலப் பிரச்சனைகளுக்கும் மன அழுத்தம் ஒரு மூலகாரணமாகும். இது முடியின் சீரான வளர்ச்சியை சீர்குலைத்து, முன்கூட்டிய நரை ஏற்படுவதற்கு வழிவகுக்கும். மேலும், தொடர்ந்து தியானம் மற்றும் யோகா செய்தால் மன அழுத்தம் ஏற்படுவதும் குறையும்.
ஈரமாக இருக்கும் முடியை சீவுதல்
ஷவரில் சூடாகக் குளிப்பது மிகவும் சுகமாக இருக்கும், ஆனால் இது முடியின் இழைகளில் இருக்கும் நீரை இழக்கச் செய்துவிட்டு, முடியில் இயற்கையாக இருக்கும் எண்ணெய்களை உச்சந்தலையில் இருந்து அகற்றிவிட்டு, உலர்ந்ததாகவும், உடையக்கூடியதாகவும் செய்துவிடும், அது மட்டுமில்லாமல் முடியானது மேலும் உடைவதற்கும் வாய்ப்புள்ளது.
மாறாக, வெதுவெதுப்பான நீரை மட்டுமே முடிக்கு பயன்படுத்துங்கள். ஈரமாக இருக்கும் முடியை சீவுதல் முடி இழைகள் எப்போதும் உடையக்கூடியதாக இருக்காது மேலும் ஈரமாக இருக்கும்போது முடியானது உடைந்து போகும். எனவே, அகலமான பல் கொண்ட சீப்பைப் பயன்படுத்துவது நல்லது அல்லது எந்தவொரு ஸ்டைலிங் செய்வதற்கு முன்பும் முடியை காற்றில் உலர வைக்கவும்.
உங்களுடைய தலைமுடியை வேர்களில் இருந்து இழுத்து மிகவும் இறுக்கமாக கட்டுவதால் இது முடிக்கு சேதத்தை ஏற்படுத்தும், எனவே இது மாதிரி செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
மேலும், தூங்கும் போது முடியை இறுக்கமாக கட்டாமல் அல்லது விரித்து விட்டோ உறங்குவது மிகவும் நல்லது. இது முடி உதிர்வை கட்டுப்படுத்துவதுடன் ஆழ்ந்த உறக்கத்துக்கும் துனை புரிகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |