நரை முடியை முழுமையாக மறைக்க வேண்டுமா? இப்படி செய்து பாருங்கள்
தற்காலத்தில் தமது உணவுப்பழக்கம் மற்றும் சூழல் மாசு காரணமாக தலைமுடி அதிகளவில் பாதிப்புக்குள்ளாகுகிறது. அதிலும் இளவயதிலேயே பெரும்பாலானவர்களுக்கு தலைமுடி நரைத்துவிடுகின்றது.
இந்த நரை முடிக்கு வண்ணம் பூசுவதற்கு சந்தைகளில் பல பிராண்டுகளில் வண்ணங்கள் (hair color) கிடைக்கின்றது. இதனை பயன்படுத்துவதன் மூலம் கூந்தல் அதிகளவில் பாதிக்கப்படுகின்றது.
இவ்வாறான பொருட்களில் அடங்கியுள்ள இரசாயணங்கள் தலை முடியில் மட்டுமல்லாது உடலிலும் மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. எனவே நரை முடி பிரச்சினைக்கு இயற்கை முறையில் தீர்வு தேடுவதே சிறந்தது.
பழங்கால பாட்டி வைத்திய முறை இதற்கு எதுவித பக்க விளைவுகளும் இன்றி சிறந்த தீர்வு கொடுக்கும் .
பயன்படுத்தும் முறை
முதலில் மருதாணி தூள் ஒரு கப், தயிர் ஒரு கப் , தண்ணீர் ஒரு கப் மற்றும் காபி 2 ஸ்பூன் சேர்த்து நன்றாக ஒன்றுடன் ஒன்று கலக்கும் வரையில் கரைத்துக்கொள்ளவும்.
உலர்ர்ந்த கூந்தலில் நேரடியாக தடவி 2 மணிநேரத்திற்கு நன்கு உலரும் வரையில் விட்டு பிறகு சாதாரண நீரில் கூந்தலை கழுவுதல் வேண்டும்.
இதனை பயன்படுத்திய பின்னர் நரை முடி சிவப்பு நிறமாக மாறியிருக்கும் அதன் பின்னர் தலைமுடிக்கு கருமை சேர்ப்பதற்காக இண்டிக்கோ பவுடர் 1 கப் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் கூந்தலில் தடவி 2 மணிநேரத்திற்கு நன்கு உலரும் வரையில் விட்டு பிறகு சாதாரண நீரில் கூந்தலை கழுவுதல் வேண்டும்.
இதனால் இரசாயணங்களினால் ஏற்படுத்தப்படும் பக்க விளைவுகள் தடுக்கப்படுவதோடு நீண்ட நாட்களுக்கு கூந்தலின் கருமை நிறம் பாதுகாக்கப்படுகின்றது. மேலும் இந்த முறையில் கலர் செய்வதனால் நரை முடி முழுமையாக மறைக்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |