Whatsapp Message TO .pdf Files: உங்களுக்கான வழிமுறைகள்
வாட்ஸ்அப்பில் வரும் ஆயிரக்கணக்கான மெசெஜ்களை பார்க்க முடியாமல் இருப்பவர்களுக்கு அதை எவ்வாறு பிடிஎப் கோப்புகளாக மாற்றி வைக்கும் வழிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்
சிலருக்கு ஒரு நாளைக்கு வாட்ஸ்அப்பில் இருந்து பல மெசேஜ்கள் வரும். இதனால் ஸ்டோரேஜ் பிரச்சனை வரும் என்பதற்காக ஒவ்வொரு தேவையில்லாத மெசேஜ்களையும் தேடி தேடி அழித்துக்கொண்டு இருப்பார்கள்.
இந்த ஒரு தலைவலியான விஷயத்திற்காக புதிய முறை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. வாட்ஸ் அப் மெசேஜ்களை எல்லாம் எக்ஸ்போர்ட் செய்து அதை பிடி எப் கோப்புகளாக மாற்றலாம்.
இதை எப்படி செய்ய வேண்டும் அதரியுமா? வாட்ஸ் அப்பில் எக்ஸ்போர்ட் ஒப்ஷன் இருப்பது தெரிந்திருக்கும். இதில் புதிதாக அறிமுகப்பத்திய விஷயம் தான் அது.
நீங்கள் Export செய்யும் சாட்களை எல்லாம் மீடியா பைல்களுடன் Export செய்து கொள்ளலாம். அத்துடன் அவற்றை பிடிஎப் கோப்புகளாக மாற்றி சேமித்துக் கொள்ளலாம்.
Export செய்ய விரும்பும் சாட்களுக்கு சென்று அங்கு ஸ்கிரீனில் மேல் வலது மூலையில் தென்படும் மூன்று கோடுகளை கிளிக் செய்து, அதில் காண்பிக்கும் Export Chat என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
அப்போது பிடிஎப் வடிவில் சேமிக்க வேண்டுமா? என்று கேட்கும், அதற்கு ஓகே கொடுத்தால் வாட்ஸ்அப் சாட்கள் பிடிஎப் வடிவில் சேமிக்கப்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |