சனிபகவானின் கோப பார்வையில் இருந்து தப்பிக்கணுமா? இதை செய்தாலே போதும்
ஜோதிட மற்றும் இந்து சாஸ்திரங்களின் பிரகாரம் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்கள் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க ஆதிக்கத்தை செலுத்தும் என்று குறிப்பிடப்படுகின்றது.
அதிலும் குறிப்பாக சனி பெயர்ச்சி மற்றும் சனி தோஷம் என்றால் அனைவருக்குமே ஒரு இனம் புரியாத பயம் ஏற்படுவது வழக்கம்.
காரணம் ஜோதிடத்தில், சனி பகவான் எதிர்மறையான கிரகமாக பார்க்கப்படுகின்றார் நீதியின் கடவுளாக திகழும் சனிபகவான் ஒருவர் செய்யும் செயல்களுக்கு ஏற்ப எந்தவிதமான பாரபற்சமும் பார்க்காமல் அநீதியும் நேராமல் பலன்களை இரட்டிப்பாக திருப்பி கொடுப்பார் என்பது ஐதீகம்
சனியின் கோப பார்வையில் சிக்கினால் ஒருவருடைய வாழ்க்கையே பாழாகிவிடும். ஒருவருடைய ஜாதகத்தில் சனி தோஷம் இருந்தால் அவருடைய வாழ்வில் எதை தொட்டாலும் பிரச்சினை கிளம்பும்.
சனிதோஷத்து பரிகாரம் செய்யாத வரையில் வாழ்வில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். சனி தோஷத்திலிருந்து விடுபடுவதற்கு சாஸ்டதிரங்களில் கூறப்பட்டுள்ள வழிமுறைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சனிதோஷ நிவர்த்தி பரிகாரங்கள்
இந்து சாஸ்திரத்தின் பிரகாரம் வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கு உகந்த நாளாக பார்க்கப்படுகின்றது. அப்படி சனிக்கிழமையானது சனி பகவானுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சனிபகவானின் ஆதிக்கம் நிறைந்த நாளாக பார்க்கப்படுகின்றது.
ஜோதிடத்தின் அடிப்படையில் ஒருவரின் ஜாதகத்தில் சனி தோஷம் இருந்தால், அவர் வாழ்வில் சொல்ல முடியாதளவு பிரச்சினைகளையும் துன்பங்களையும் அனுபவித்து வருவார்கள்.
இதில் இருந்து விடுபட சனிக்கிழமை மாலை விளக்கு ஏற்றும் போது அதில் கருப்பு எள்ளைப் போட வேண்டும்.
இது சனிபகவானுக்கு மிகவும் உகந்த பொருளாக இருப்பதனால் இதன் மூலம் சனிகவான் மகிழ்ச்சி அடைவார் இதனால் சனி தேவரின் தீய கண், தோஷங்கள் அல்லது அவர் கொடுக்கும் இடர்களில் இருந்து விடுபட முடியும் என்பது ஐதீகம்.
இப்படி சனி பகவானின் கோப பார்வையில் இருந்து விடுபட விளக்கேற்றுவதாக இருந்தால் அதனை நிச்சயம் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, குளித்து, சுத்தமான ஆடைகளை அணிந்து, அதன் பின்னர் தான் விளக்கேற்ற வேண்டும்.
விளக்கில் கருப்பு எள்ளை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். 7, 14, 21 அல்லது 28 போன்ற எண்ணிக்கையில் கருப்பு எள்ளை எடுத்து கொள்ள வேண்டும். வீட்டில் பூஜை செய்யும் இடத்தில் விளக்கை வைக்கலாம்.
இந்த சனி பகவான் கோவிலில் உள்ள சிலையின் முன்பு இந்த விளக்கை கொழுத்துவது மிகவும் சிறப்பாக பலனை கொடுக்கும். இது சனி பகசானின் கோபத்தை தணிக்கும் என நம்பப்படுகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |