போர்வையில் வீசும் கெட்ட வாசனையை இல்லாமலாக்குவது எப்படி?
பொதுவாக வீடுகளில் குளிர்காலம் வந்து விட்டால் வீட்டிலுள்ள ஆடைகள் மற்றும் போர்வைகளில் ஈர வாசணை இருக்கும். இதனால் வெளியில் செல்லும் பொழுது ஆடைகளை அணிந்து செல்ல முடியாத நிலை இருக்கும்.
அதிலும் குறிப்பாக மாதக் கணக்கில் பீரோவில் ஆடைகளை வைத்திருந்து விட்டு வெளியில் எடுத்து பார்த்தால் விசித்திரமான வாசனை வீசும்.
இப்படி வாசனை வீசும் போர்வையை துவைக்காமல் பயன்படுத்த முடியாது. ஆனால் அவற்றை குளிர்காலத்தில் துவைக்கவும் முடியாத நிலை இருக்கும்.
இது போன்ற சமயங்களில் போர்வைகளை துவைக்காமல் எப்படி சுத்தம் செய்வது என்பது பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
கெட்ட வாசனையை போக்குவது எப்படி?
1. உங்கள் வீட்டில் இருக்கும் உள்ள போர்வைகள் மற்றும் கம்பளையில் கெட்ட வாசனை வருகின்றது என்றால் அதனை வாரத்திற்கு மூன்று தடவைகள் சரி வெயிலில் காய வைக்கவும். இப்படி செய்து வந்தால் பாக்டீரியாக்களின் வளர்ச்சி தடைப்படும் அத்துடன் துர்நாற்றமும் இருக்காது.
2. சிலர் வெளியிலிருந்து வந்தவுடன் கை, கால்களை கழுவாமல் அப்படியே படுக்கையில் அமர்ந்து விடுவார்கள் இதன் காரணமாக போர்வையில் துர்நாற்றம் வீசும். அத்துடன் இன்னும் சிலர் கை, கால்களில் ஈரப்பதன் இருக்கும் பொழுதே அப்படியே போர்வைக்குள் நுழைந்து விடுவார்கள். இது துர்நாற்றத்தை ஏற்படும்.
3. குளிர்காலத்தில் படுக்கையில் அமர்ந்து போர்வையை போற்றிக் கொண்டு உணவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
வீட்டு வைத்தியம்
1. குளிர்காலத்தில் போர்வையை துவைக்க முடியாது. எனவே இந்த காலப்பகுதியில் கற்பூரத்தை நன்றாக உடைத்து அதனை ஒரு தாளில் வைத்து நன்றாக மடித்து போர்வைக்குள் வைத்து விட்டு அப்படியே விட்டு விடவும். இப்படி செய்த பின்னர் நன்றாக வெயிலில் போட்டு எடுத்தால் போர்வைக்குள் இருக்கும் துர்நாற்றம் இல்லாமல் போகும்.
2. போர்வையில் இருந்து வரும் கெட்ட வாசனை வரும் பொழுது உங்களுக்கு விருப்பமான அத்தியாவசியமான எண்ணெய் சில துளிகளை போர்வைக்குள் தெளிக்கலாம். இது பருத்தி துணியில் உருண்டைகளாக மாறி போர்வையில் இருக்கும் துர்நாற்றத்தை போக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |