வேலைபளுவால் அதிகரிக்கும் மன அழுத்தம்... 5 நிமிடத்தில் ரிலாக்ஸேஷன் செய்வது எப்படி?
பொதுவாக பணியிடத்தில் அழுத்தம் அதிகரிக்கும் போது மன அழுத்தம் தனாகவே அதிகரிக்கும். மன அழுத்தத்துடன் இருக்கும் போது நம்மால் நிதானமாகவும் தெளிவாகவும் இயங்க முடியாத நிலை ஏற்படும்.
ஒரு நிறுவனத்தில் பணியாளர்கள் தான் மதிப்பு மிகுந்த சொத்து என்பது நிறுவனங்களுக்கு நன்றாகவே தெரியும். அப்படிப்பட்ட பணியாளர்களுக்கு, அலுவலகத்தில் எப்போதுமே பாசிட்டிவ் எனர்ஜி தேவை.
பணியாளர்களுக்கு சரியான ஓய்வு கிடைக்கிறதா, முறையாக சாப்பிடுகிறார்களா என்பதை கூட நிறுவனங்கள் கவனிக்க வேண்டும். ஏனென்றால் இவையெல்லாம் உளவியல் ரீதியாக ஒருவரை பாதித்து மன அழுத்தத்தை அதிகரிக்க கூடும்.
இவ்வாறு பணியிடத்தில் ஏற்படும் வேலை அழுத்தம் காரமான அதிகரிக்கும் மன அழுத்தத்தை எவ்வாறு சிறப்பான முறையில் கையாண்டு மன அழுத்தத்தை விரைவாக தணிக்கலாம் என்பது தொடர்பில் ஒரு சில எளிய வழிமுறைகளை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
மன அழுத்தத்தை குறைககும் வழிகள்
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் பொது 5 நிமிடங்கள் ஆழ்ந்த சுவாசம் எடுத்து உங்கள் மனதை சுத்திகரிப்பதால், விரைவில் மனஅழுத்தம் குறைந்து தெளிவான மனநிலையை மீண்டும் பெறமுடியும் என உளவியல் ஆய்வுகள் குறிப்பிடுகின்றது.
வேலைபளு அதிகரிக்கும் போது குழப்பமாக நிலை ஏற்பட்டால், சிறிது நேரம் நிற்பதன் மூலம் உடலின் அழுத்தத்தை தணிக்த்து மனதை விரைவில் சீராக செயற்பட வைக்க முடியும்.
விரைவாக மன அழுத்தத்தில் இருந்து விடுபட வெறும் 5 நிமிடங்கள் நடைபயிற்சி செய்து உங்கள் உடலை தளர்த்துவதன் மூலம் மீண்டும் புத்துணர்வு பெற முடியும்.
மன அழுத்தம் அதிகரித்து பணியில் நாட்டம் இழக்கும் போது 5 நிமிடங்கள் அமைதியாக கண்களை மூடி எண்ணங்களை ஒருநிலைப்படுத்தும் போது மன அழுத்தம் விரைவில் குறையும்.
ஒரு சிறிய சந்தோஷத்தை அனுபவித்து, அதை மனதில் நிலை நிறுத்தும் போதும் மனஅழுத்தம் குறைவடையும் இது பிடித்த பாடலை கேட்பது அல்லது ஒரு தேனீர் பருகுவது போன்ற சிறிய மகிழ்ச்சியை அனுபவிப்பது சிறந்த பலனை கொடுக்கும்.
இவ்வாறான சிறிய வழிமுறைகளை கையாள்வதால், பணியிடத்தில் அதிகரிக்கும் மன அழுத்தம் விரையில் குறையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |