பாஸ்வேர்டு மறந்து போச்சா? இந்த முறை தெரிந்தால் எளிதில் கண்டுப்பிடிச்சிடலாம்!
பொதுவாவவே தற்காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் அனைவரது கைகளிலும் ஸ்மார்ட் போன் காணப்படுகின்றது.
குறிப்பாக சமூக ஊடகங்கள் இன்றி இன்றைய காலத்தில் முழுமையாக ஒரு நாளை கூட கடத்த முடியாது என்றால் மிகையாகாது.
அந்தளவுக்கு சமூக ஊடகங்கள் மக்களின் வாழ்வில் முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது. ஒருவர் பல்வேறு சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்துக்கொள்வதால், அத்தனை கணக்குகளின் பாஸ்வேர்டுகளை நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை.
மேலும் ஸ்மார்ட் போன்களில் தானாக உள்நுழைய (automatic login) அனுமதிக்கப்படுவதால், பலரும் பாஸ்வேர்டை மறந்துவிடும் வாய்ப்பு அதிகரித்துவிட்டது.
சில சமயங்களில் உங்கள் தரவு தொலைந்துவிட்டால் அல்லது மற்றொரு சாதனத்தில் அதே செயலியைத் திறக்க வேண்டும் எனும் பட்சத்தில் தான் பாஸ்வேர்ட் தேவைப்படும்.இவ்வாறான நேரங்களில் மறந்து போன பாஸ்வேர்டுகளை எவ்வாறு கண்ணடுப்பிடிப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எவ்வாறு கண்டுப்பிடிப்பது?
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ஜிமெயில் போன்ற செயலிகளின் கணக்குகளுக்கான பாஸ்வேர்டுகள் மறந்துவிட்டால் பின்வரும் முறைணை பயன்படுத்தி எளிதில் கண்டுப்பிடித்துவிடலாம்.
உங்கள் அனைத்து சமூக ஊடக கணக்குகளுக்கான பாஸ்வேர்டுகளும் உங்கள் போனில் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டிருக்கும்.
இந்த படிமுறைகளை பின்பற்றவும்:
உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள 'Settings' என்பதற்குச் செல்லவும். கீழே ஸ்க்ரோல் செய்து 'Google' விருப்பத்தைக் கண்டறிய வேண்டும்.
'Google' என்பதைத் தேர்ந்தெடுத்து, பின்னர் 'Google Services' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 'All Services' என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
அதனையடுத்து 'Autofill with Google' என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பின்னர் 'Google Password Manager' என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதன் போது , உங்கள் போனில் உள்நுழைந்துள்ள அனைத்து செயலிகளும் வரிசையாகக் அங்கு பட்டியல்படுத்தப்பட்டிருக்கும்.
நீங்கள் எந்த செயலியின் பாஸ்வேர்டை பார்க்க வேண்டுமோ, அதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் உங்கள் போனில் கைரேகை அல்லது பாஸ்வேர்டை பயன்படுத்தி, அந்த செயலியின் பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பார்வையிட முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |