உங்க நகம் அடிக்கடி உடைந்து போகுதா? நகத்தை வலிமையாக்கும் புதிய டிப்ஸ்
உங்கள் கைகளின் தோற்றத்தை அழகாக காட்டுவது நகங்கள் தான். நகங்கள் உங்கள் அழகில் மட்டும் பங்கெடுப்பது இல்லை, உங்கள் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திலும் பங்கெடுக்கும்.
கைகளில் இருக்கும் நகங்கள் சிலருக்கு அடிக்கடி உடையும் இதற்கு காரணம் நகங்களுக்கு உரிய சத்துக்கள் போதியளவில் கிடைக்காததுதான் காரணம். இந்த நகப்பகுதி கெரட்டின் என்னும் ஒரு புரதப்பொருளால் ஆன பகுதியாகும்.
எனவே நகங்கள் உடையாமல் வலிமையாகவும் அழகாகவும் மாற்ற கூடிய விஷயங்களை தொடர்ந்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பாதுகாக்கும் வழி
1.தினசரி உங்கள் உணவில் புரதம், பயோட்டின், வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் கால்சியம், துத்தநாகம் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் இருக்க வேண்டும்.
அதனால் இந்த சத்துக்கள் கொண்ட உணவை உணவாக எடுத்து கொள்ளுங்கள்.
2. நகங்கள் உடையக்கூடியதை தடுப்பதற்கு சரியான நீரேற்றம் அவசியம். நகங்கள் நீரேற்றத்துடன் இருக்க போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தினமும் நகங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
3. கடுமையான இரசாயனங்கள் அல்லது சிராய்வுகள் ஏற்படக்கூடிய இடங்களில் வேலை செய்யும் போது கையுறை அணிந்து வேலை செய்ய வேண்டும்.
நகங்களை தண்ணீரில் நீண்ட நேரம் வெளிப்படுவதால் நகங்கள் நீரிழப்பு மற்றும் உடையக்கூடிய தன்மைக்கு வழிவகுக்கும். இதன் காரணமாக கையுறைகளை அணிவதன் மூலம், உங்கள் நகங்களின் சேதத்திலிருந்து பாதுகாக்கலாம்.