H3N2 காய்ச்சலில் சிக்காமல் இருப்பது எப்படி? குழந்தைகளுக்காக தெரிஞ்சிக்கோங்க
ஃப்ளூவின் அதிகபட்ச பாதிப்பை உண்டு செய்யும் H3N2 காய்ச்சலால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். ஏனெனில் இவர்களுக்கான நோய் எதிர்ப்பு சக்தி சற்று குறைவாக இருக்கும்.
இவர்களுக்கு காய்ச்சல் வரும் பொழுது அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் சிரமப்படுவார்கள். “ இன்ஃப்ளூயன்சா வைரஸ்” என்பது ஒருவகை நோய் தொற்று. இது சளி மூலம் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதன் வீரியம் அதிகரிக்கும் பொழுது சளி, இருமல், மூக்கடைப்பு, மூச்சுத்திணறல், உடல் வலி, குமட்டல், வயிற்றுப்போக்கு, நீர் கோர்த்தல் ஆகிய அறிகுறிகள் இருக்கும்.
Image - livescience
அந்த வகையில் ஹெச்3என்2 காய்ச்சலை எப்படி கட்டுபடுத்துவது என்பது தொடர்பில் தொடர்ந்து தெரிந்து கொள்ளலாம்.
ஹெச்3என்2 காய்ச்சலை கட்டுபடுத்துவது எப்படி?
1. தொடர்ந்து 3- 4 நாட்கள் வரை காய்ச்சல் இருந்தால் அது நிச்சயம் ஏதாவது ஒரு வைரஸ் தொற்றாக தான் இருக்கும். இது பருவ கால மாற்றங்களின் போது அதன் வீரியத்தை காட்டும். இருமல் அடிக்கடி இருந்தால் இது ஹெச்3என்2 காய்ச்சலின் ஆரம்ப அறிகுறியாக பார்க்கலாம்.
2. குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் போது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் உள்ள உணவுகளை கொடுக்க வேண்டும்.
3. சாலையோர கடைகளில் இருக்கும் உணவுகள், சுகாதாரமற்ற உணவுகளை முற்றிலும் தவிர்த்து விட்டு வீடுகளில் சமைக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும்.
Image - medicaldialogues
4. கம்பங்கூழ், கேப்பை கூழ், திறந்த நிலையில் இருக்கும் வெங்காயம், மோர் மிளகாய், வத்தல் ஆகிய உணவுகள் திறந்த வெளியில் வைத்து விற்கப்படுவதால் இதில் அதிகப்படியான நோய் தொற்று இருக்கும்.
5. சூட்டு ஆறிய தண்ணீரை குடிக்க வேண்டும். குளிர்ந்த நீர் அல்லது சுத்திகரிக்கப்படாத நீரை குடிக்கும் பொழுது வைரஸ் தொற்று அதிகமாவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |