Lovers Horoscope: காதலியை உயிராக நினைக்கும் காதலர்கள் என்ன ராசி-ன்னு தெரியுமா?
காதலர் தினம் நெருங்கி வருகின்றது என்பதால் காதலர்கள் அதனை கொண்டாட மிகுந்த ஆர்வமாக இருப்பார்கள்.
பலரும் தங்களின் காதலை மனதிற்குள் வைத்து கொண்டு அதனை வெளிப்படுத்த தயங்கிக் கொண்டிருப்பார்கள்.
அப்படியானவர்கள் ராசிகளின் மூலம் அவர்களின் குணப்பண்புகளை தெரிந்து கொண்டு, அதன்படி காதலை வெளிபடுத்துவார்கள். ஒவ்வொருவருக்கும் பிடித்த விஷயம் என்று சில விஷயங்கள் இருக்கும்.
அதை சரியாக தெரிந்து காதலை முன்மொழிவது வெற்றிக்கான வாய்ப்பை அதிகரிக்கும். ஒருவரின் ஆளுமை மற்றும் அவர்களுக்கு பிடித்த விஷயத்தை நிர்ணயிப்பதில் அவர்களின் பிறந்த ராசி முக்கியப்பங்கு வகிக்கிறது.
அந்த வகையில், உங்கள் துணையின் ராசி தெரிந்து கொண்டு அவர்கள் எப்படியான காதலை விரும்புகிறார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
மேஷம் | மேஷ ராசியில் பிறந்தவர்கள் தைரியமான ஆளுமைக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் ஒரு வலுவான காதல் உறவு இருக்கும். இதனால் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வார்கள். இவர்கள் இருக்கும் இடத்தில் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். காதலை வெளிபடுத்த நினைப்பவர்களாக இருப்பார்கள். |
மிதுனம் | மிதுன ராசியில் பிறந்தவர்கள் சமூக பட்டாம்பூச்சி போன்று நடந்து கொள்வார்கள். இதயத்தில் அதிகமான காதல் உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் மற்றவர்கள் போல் அல்லாமல் ஒரு விஷயம் நடந்தவுடன் அதை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் செய்திகளைப் பகிர்ந்து கொள்வார்கள். |
சிம்மம் | சிம்ம ராசியில் பிறந்தவர்களிடம் அரவணைப்பது, கட்டிப்பிடிப்பது போன்ற சின்ன சின்ன விஷயங்களில் கூட அதிக கவனம் இருக்கும். உறுதியுடன் இருப்பதால் காதலை வெளிபடுத்துவதில் ஐயம் கொள்ளமாட்டார்கள். உணர்வுகளை வெளிப்படுத்தும் கடிதத்துடன், சில பூக்களைக் கொடுத்து அவர்களிடம் காதலை வெளிப்படுத்தலாம். |
கன்னி | கன்னி ராசியில் பிறந்தவர்கள் பரிபூரணவாதிகளாகவும் உள்ளுணர்வு கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்களிடம் காதலை வெளிப்படுத்தினால் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்து விடுவார்கள். யாரும் இல்லாத போது, அவர்கள் எதிர்பார்க்காத போது தைரியமாக காதலை வெளிபடுத்தலாம். ஆனால் காதல் பற்றிய அனுபவங்கள் இவர்களிடம் அதிகமாக இருக்கும். உடைந்து போனவர்கள் போன்று இருப்பார்கள். |
தனுசு | தனுசு ராசிக்காரர்கள் ரிஸ்க் எடுப்பதில் வல்லவர்களாக இருப்பார்கள். எனவே இவர்களின் காதலையும் அப்படியே வெளிப்படுத்துவார்கள். பொது இடங்களில் அதிகமாக பார்க்கலாம். காதலர்களாக சுற்றித்திரிவார்கள். பெரிதாக யாரை பார்த்தும் பயம் கொள்ளமாட்டார்கள். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).