மழைக்காலங்களில் அடிக்கடி ஏற்படும் சிறுநீர் பாதை தொற்று... எவ்வாறு தடுப்பது?
பொதுவாக மழைக்காலத்தின் ஈரமான சூழ்நிலைகள் பாக்டீரியா மற்றும் பங்கசு வளச்சிக்கு இதமாக இடமளிக்கின்றது.
அதனால் பெண்களுக்கு சிறுநீர் பாதை தொற்றுக்கள் ஏற்வடுவதற்கான அபாயம் அதிகரிக்கின்றது.அதிலிருந்து எவ்வாறு பாதுகாப்பு பெறுவது என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
சிறுநீரக தொற்று
சிறுநீரக தொற்று எனப்படுவது ஆண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் உட்பட அனைத்து வயதினரையும் பாதிக்கக்கும் ஒரு பொதுவாக பிரச்சிகையாக இருந்தாலும், பெண்களுக்கு சிறிய அளவிலான சிறுநீர் குழாய் இருப்பதன் காரணமாக இந்த நோய் தொற்று பெரும்பாலும் பெண்களை அதிகம் பாதிக்கும் நிலை காணப்படுகின்றது.
உடலுறவு மற்றும் மாதவிடாய் போன்ற காரணங்கள் இந்த ஆபத்தை மேலும் அதிகரிக்கின்றது. குறிப்பாக மழைக்காலங்களில் சிறுநீரக தொற்று குறித்து பெண்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
தடுக்கும் வழிமுறைகள்
இந்த தோற்றுநோய்களை தடுக்க போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, மற்றும் அடக்காமல் சிறுநீர் கழிப்பது, சுகாதார நடைமுறைகளை சரியாக பின்பற்றுவது போன்றவை மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது.
மாதவிடாய் காலங்களில் நான்கு தொடக்கம் ஐந்து மணித்தியாலங்களுக்கு ஒரு முறை உடைகளை மாற்றி சுத்தம் செய்ய வேண்டியது அவசியம்.
சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளைத் தடுக்க நல்ல தனிப்பட்ட சுகாதாரத்தைப் பேணுவது மிக முக்கியம். மழைக்காலங்களில், உங்கள் பிறப்புறுப்புப் பகுதியை சுத்தமாகவும், வறண்டதாகவும் வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது முக்கியமாகும்.
கழிப்பறையைப் பயன்படுத்திய பின்னரும், உடலுறவுக்கு பின்னரும் ஆசனவாய்ப் பகுதியிலிருந்து சிறுநீர்க்குழாய்க்கு பாக்டீரியாக்கள் பரவுவதைத் தவிர்க்க எப்போதும் முன்னும் பின்னும் சுத்தமான கழுவிவிட்டு பருத்தி துணியை பயன்படுத்தி துடைப்பது சிறந்தது. இதனால் பாக்டீரியா வளர்ச்சி தடைப்படும்.
மழைக்காலத்தில், ஈரமான உடைகள் மற்றும் நீச்சலுடைகளில் பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும்.
அதனால் மழைக்காலங்களில் ஈரமான உடையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதைத் தவிர்ப்பது அல்லது துணிகளை விரைவில் மாற்றுவது தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பு கொடுக்கும்.
வலுவான நோயெதிர்ப்பு அமைப்பு உங்கள் உடல் தொற்றுகளை திறம்பட எதிர்த்துப் போராட உதவும். எனவே நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்க சரியான உணவு முறையை பின்பற்ற வேண்டியது அவசியம்.
முக்கியமாக மழைக்காலங்களில் பெண்கள் பொது கழிப்பறைகளை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பது சிறப்பு. குறித்த விடயங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் சிறுநீர் பாதை தொற்றுகளில் இருந்து பாதுகாப்பு கிடைக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |